இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'படையாண்ட மாவீரா ' எனும் திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகி வரும் 'படையாண்ட மாவீரா ' எனும் திரைப்படத்தில் வ. கௌதமன் , பூஜிதா, சமுத்திரக்கனி, ரெடின் கிங்ஸ்லி, 'பாகுபலி' பிரபாகர், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், சாய் தீனா, 'நிழல்கள்' ரவி, 'தலைவாசல்' விஜய், மது சூதன ராவ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான வ. கௌதமன் தமிழர்களின் கலாச்சார ஆடையில் தோன்றுவதும் , பின்னணியில் புலிக்கொடி பறப்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM