தெற்கில் இடம்­பெற்ற வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளுக்­காக வடக்கு மக்­க­ளி­டத்தில் சேக­ரிக்­கப்­பட்­டுள்ள உலர் உணவு உள்­ளிட்ட பல பொருட்கள் இன்று தெற்­கிற்கு  எடுத்­து­வ­ரப்­ப­ட­வுள்­ளது.

வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வாக அர­சாங்­கத் திணைக்­க­ளங்­களின் பூரண ஒத்­து­ழைப்­புடன் வடக்கில் சேக­ரிக்­க­ப்பட்ட நிவா­ரண பொருட்­களே இன்று  எடுத்­து­வ­ரப்­ப­ட­வுள்­ளன.

இந்த பொருட்கள் யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, வவு­னியா, கிளி­நொச்சி ஆகிய பகு­தி­களில் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன.  பொருட்கள் களுத்­துறை மாவட்ட செய­லாளர் யூ.சீ.டி ஜய­லா­ல­லி­டத்தில் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே­யினால் வழங்கி வைக்­கப்­ப­ட­வுள்­ளன. நாளைய தினம் காலை 9 மணிக்கு மேற்­படி நிகழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது.

நாட்டு மக்கள் குழுக்கள் மத்­தியில் ஒற்­று­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் மேம்­ப­டுத்­து­வ­தற்கு சரி­யான தரு­ணமே தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. அதனால் தெற்கு மக்­களும்  நல்­லி­ணக்­கத்­தினை உண்டுபண்ண சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.