கொழும்பு துறைமுக கப்பற்துறை தடாகத்தில் விழுந்து ஒருவர் பலி !

Published By: Digital Desk 2

01 Feb, 2025 | 04:01 PM
image

கொழும்பு துறைமுக வளாக கப்பற்துறையில், பணிபுரிந்த ஒருவர் கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக பயன்படுத்தப்படும் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள கப்பற்துறையில் துணை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த பரகஹவிட்ட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். 

சுழியோடிகள் மூலம் அவர் வெளியே எடுக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், உயிரிழந்த நபர் காலை உணவை அருந்திவிட்டு கைகளைக் கழுவுவதற்காக கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக பயன்படுத்தப்படும் தடாகத்திற்கு சென்று திரும்பி வரும் வழியில் தடாகத்தில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17