நாட்டை பழைய பாதையில் அழைத்துச்செல்ல முடியாது ; இராமலிங்கம் சந்திரசேகர்

01 Feb, 2025 | 11:38 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும்.  அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். 

மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற யாழ். வல்வெட்டித்துறை கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும்தெரிவிக்கையில்,   

யுத்தம் நிறைவடைந்து30 வருடங்கள் கடந்துள்ளன. எனினும் எமது மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.இந்த மக்கள் பெரும் துன்பத்திற்கு மத்தியில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நாட்டில்வறுமைக் கோட்டில் வாழும் மக்களை கொண்ட மாகாணமாக வட மாகாணம் உள்ளது. குறிப்பாக முல்லைத்தீவுகிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

அன்று எமது ஜனாதிபதிஅநுரகுமார திஸாநாயக்க, இந்த மக்களை மீட்டெடுப்பதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மக்களுக்கு வளமான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதே தனக்கும் மக்களுக்கும் இடையேஉள்ள பிணைப்பு எனக் கூறியிருந்தார்.

வட பகுதியில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.வாள்வெட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளன. 

சுதந்திரமாக வாழமுடியாத சூழ்நிலை உள்ளதாக தேர்தலுக்கு முன்னதாக என்னை சந்தித்த மக்கள் கூறினார். இதற்குநிரந்தர தீர்வை பெற்றுத் தருமாறு கோரினார்கள். 

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாகவாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும். அதுவே எமது கனவாகும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். 

இரண்டு பிரதானதேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். 

எமக்கு வாக்களிக்காத மக்களையும் இதில் இணைத்துக் கொண்டு ஒன்றாக பயணிக்க நாம் தயாராகவே உள்ளோம். மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்...

2026-05-20 15:26:54
news-image

உலக சுகாதார மாநாட்டில் முக்கிய சந்திப்புகள்:...

2026-05-20 15:11:17
news-image

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து...

2026-05-20 15:22:19
news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04
news-image

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால...

2026-05-20 12:28:10
news-image

பொகவந்தலாவையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதி...

2026-05-20 12:44:06
news-image

மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை...

2026-05-20 14:51:02
news-image

“பாடசாலை அதிபரை மாற்றவேண்டாம்” - யாழ்....

2026-05-20 12:46:00