வெற்றி பெறாவிட்டாலும் அரசியல் பயணத்தில் மாவை என்ற பாத்திரத்தின் பங்களிப்பு வரலாற்று அடையாளமாக என்றுமிருக்கும் - சமத்துவக் கட்சி

31 Jan, 2025 | 06:58 PM
image

வெற்றி பெறவில்லை என்றாலும் அரசியல் பயணத்தில் மாவை சேனாதிராஜா என்ற பாத்திரத்தின் பங்களிப்பு வரலாற்று அடையாளமாக என்றுமிருக்கும் என சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது. 

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்காக சமத்துவக் கட்சி வெளியிட்டுள்ள இரங்கலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோசத்தோடு பயணித்த மூத்த அரசியல் தலைவர் மாவை சோனாதிராஜா அவர்கள்.

இவர்  1970களிலிருந்து தமிழரின் உரிமைக்கான அரசியல் கோஷத்தோடு பயணித்தவர். இதற்காக  ஆரம்ப காலத்தில் நீண்ட சிறை வாழ்க்கையை  அனுபவித்தவர். பின்னாளில் பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்டு, அந்த அரசியலைத் தொடர்ந்தவர். 

அவருடைய அரசியல் காலமானது நெருக்கடிகளும் ஏற்ற இறக்கமும் கொண்டதாக இருந்தது. ஆயினும் அவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்து நின்று, தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 

அவர் விரும்பி முன்னெடுத்த அரசியல் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அந்த அரசியல் பயணத்தில் மாவை சேனாதிராஜா என்ற பாத்திரத்தின் பங்களிப்பு வரலாற்று அடையாளமாக என்றுமிருக்கும்.

 அந்த வகையில் மூத்த அரசியல் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு சமத்துவக் கட்சி தனது அஞ்சலியை செலுத்தி நிற்கிறது என சமத்துவ கட் சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32
news-image

தமிழ், முஸ்லிம் அரசியல் கூட்டணி நாட்டின்...

2026-07-16 15:44:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைகள் : சீர்திருத்தங்களை...

2026-07-16 21:12:54
news-image

பொருளாதார நெருக்கடியிலும் அரசாங்கத்தின் நல்லாட்சி நடவடிக்கைகளுக்கு...

2026-07-16 15:21:48
news-image

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நிதி மோசடியாளர்களை...

2026-07-16 15:29:55