விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2025

Published By: Digital Desk 2

31 Jan, 2025 | 10:24 PM
image

மேஷம்

வாழ்க்கையில் எப்பொழுதும் மேன்மை பெற நினைக்கும் மேஷ ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பெயர்ச்சி, ராகு / கேது பெயர்ச்சி உண்டாவதால் உங்களின் செயல்களிலும், பேச்சிலும் திறமையை அதிகரிக்க துவங்குவீர்கள். பல்வேறு சோதனைகளிலிருந்து இனி விடுபடும் சூழ்நிலை உருவாகும்.

உங்களின் ராசியில் உச்சம் பெறும் சூரியன் உங்களுக்கு பக்கபலமாக இருந்து பல்வேறு நல்ல காரியங்களுக்கு உதவிகளைப் பெற்று தருவார். தனஸ்தானத்தில் குரு வைகாசியில் பெயர்ச்சியாகி மூன்றாமிடத்தில் அமர்வது உங்களின் ராசிக்கு விரையாதிபதி குரு மூன்றில் மறைவு பெறுவதால், எங்கும் உங்களின் வளர்ச்சிக்கு உண்டான நல்ல நிலைகளைப் பெற்று தருவார், குரு பார்க்க கோடி நன்மை என்பது போல குரு ஏழாமிடத்தையும் பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பதால் தொழிலில் முடங்கி கிடந்த காரியம் இனி செயல்படதுவங்கும். நண்பர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

உங்களின் ராசிக்கு ஆறாமிடத்தில் இருந்த கேது, பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதாவ், சில காரியங்களில் தடைபடுதல், கிடைக்க வேண்டிய பொருள்கள் கிடைக்காமல் தடைபடுதல் போன்ற செயல்கள் இருக்கும். இருந்தாலும் உங்களுக்கு ஊக்கம் தருகின்ற வகையில் லாபஸ்தானத்தில் ராகு அமர்ந்து. உங்களின் தேவைகளுக்கு பக்கபலமாக அமைவார். ராகுவுடன் சனி சேர்க்கை இருப்பதால், கூட்டு தொழிலில் நீங்கள் சேரும் நபர்கள் நல்லவர்களாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம். பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட சில விடயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. ஓன்லைன் வர்த்தகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் நலனின் சிறப்பான முன்னேற்றம் அடைய வாய்ப்பு அமையும். பணம் தாராளமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  

திங்கள், செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட நிறங்கள்: 

ஓரஞ்சு, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட எண்கள்: 

1, 2, 3, 9.

பரிகாரங்கள்:

வியாழக்கிழமை காலை 06 - 07 மணிக்குள் தொடர்ந்து தேங்காய் எண்ணெய் தீபம் விநாயகருக்கு ஏற்றி, அருகம்புல் மாலை, து.பருப்பு கலந்த அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.

ரிஷபம் 

இலக்கையும், உறுதி தன்மையும் கொண்டு விளங்கும் ரிஷப ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமர்வதும் தொழில் ஸ்தானத்தில் ராகு சனியுடன் இணைவதும் செய்யும் தொழிலில் வெளிநாட்டு வாய்ப்புகளை பெறுவீர்கள். எதையும் முன்கூட்டியே முடிவு செய்து அதில் வெற்றி காண்பீர்கள்.

இந்த ஆண்டு துவக்கத்தில் 26-04-2025 முதல் ராகு தொழில் ஸ்தானத்தில் அமர்வது உங்களின் தொழில் ஸ்தானம் பலம் பெற்று யோகாதிபதி சனியுடன் இணைவு பெறுவதால் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் மூலம் நல்ல வருமானம் பெறும் வாய்ப்பைப் பெறுவீர்கள். ஓன்லைன் வர்த்தகத்தின் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். பயிற்சிகளை எடுத்து கொண்டு நேரடி விற்பனை நிறுவன பொருட்கள் விற்பனையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

குரு வரும் 11-05-2025 முதல் தனஸ்தானத்தில் அமர்வது பொருளாதாரத்தில் வளர்ச்சியை பெறும் வாய்ப்புகள் அமையும். தங்க நகை வாங்குதல் இரும்பு சம்மந்தமான பொருட்கள் மூலம் நல்ல வருமானம் பெறுதல். வியாபாரத்தில் முன்னேற்றம் காணுதல் போன்ற வளர்ச்சிகளை பெறுவீர்கள். தங்கம் வாங்கும் வாய்ப்பு சிலருக்கு அமையும். நினைத்ததை நினைத்தபடி உருவாக்கி கொள்ளும் திறமைகள் உண்டாகும். பூர்வ புண்ணியஸ்தானத்தில் கேது அமர்வது நல்லதல்ல. இதனால் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் தடைபடும். கொடுக்க வேண்டிய இடத்தில் தாமதமாக வந்து சேரும். எதிலும் சுயமுயற்சி நல்ல பலனைப் பெற்று தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  

வெள்ளி, சனி, வியாழன்.

அதிர்ஷ்ட நிறங்கள்: 

வெண்மை, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட எண்கள்: 

3, 6, 9.

பரிகாரங்கள்:

ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மகாலெட்சுமி வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்று வணங்கி வருவதும் மாதம் ஒரு முறை 10 சுமங்கலிகளுக்கு மஞ்சள் கிழங்கு தாலி வாங்கி கொடுத்துவர சகல தடைகளும் நீங்கும்.

மிதுனம்

திறமையை வளர்த்துகொண்டு செயல்படும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் ஆண்டு உங்களின் ராசிக்கு விரையகுரு ஜென்ம குருவாக வந்து அமர்வது நற்பலன்களை பெற்று தரும். அதுபோல மூன்றில் கேதுவும், பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும் அமர்வது உங்களின் வளர்ச்சிக்கு நல்ல பலனை பெற்று தருவார்கள்.

இந்த ஆண்டு துவக்கத்தில் ராகு / கேது 26-04-2025 முதல் கேது உங்களுக்கு முயற்சிகளின் மேன்மையை பெற்று தருவார். ஒரு காரியத்தின் வெற்றி நமது விடாமுயற்சியின் பயனாக கிடைக்க பெறுகின்றது அதன் மூலம் நமக்கு எந்த அளவு பலன் என்பதை கேது உங்களுக்கு சிறப்பாக செய்து, மேலும் மேலும் வெற்றியை பெற்று தருவார். அதுபோல ராகு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலிலும், உத்தியோகத்திலும் வெற்றியை பெற்று தரும். கிடைத்த வரை போதும் என்று எண்ணாமல் மேலும் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும்.

இந்த ஆண்டு துவக்கத்திலேயே குரு பெயர்ச்சியாகி, ராசிக்கு வருவது ஜென்ம குருவாக இருந்தாலும் மிதுனத்தில் எந்த கிரகம் அமர்ந்தாலும் விதுனம் இல்லை என்பது போல குரு பார்க்குமிடம் பலம் பெறும் பாக்கியஸ்தானத்தை பார்ப்பது வெளிநாட்டு தொடர்புகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். பூர்வ புண்ணியம் பலம் பெறும். திருமண தடைகள் நீங்கி, திருமண வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குறுகிய காலத் திட்டங்களில் முனைப்புடன் செயல்பட்டு நற்பலன்களைப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்கு கைகூடும். உங்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  

புதன், வியாழன், ஞாயிறு.

அதிர்ஷ்ட நிறங்கள்: 

பச்சை, மஞ்சள், ஓரஞ்சு.

அதிர்ஷ்ட எண்கள்: 

3, 5, 9.

பரிகாரங்கள்:

செவ்வாய்கிழமைகளில் தொடர்ந்து முருகன் வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்றி சிவப்பு, நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் வெற்றியை பெற்றுத் தரும்.

கடகம்

சோதனைகளைக் கடந்து சாதிக்கும் கடக ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு உங்களின் மனவலிமையும், தைரியமும் உங்களை பல வழிகளில் வளர்ச்சியை அடைய உதவி செய்யும். ஆண்டு தவக்கத்தில் ராகு / கேது பெயர்ச்சியும், அடுத்த குரு பெயர்ச்சியும் வருவதும், ராசிக்கு தனஸ்தானத்தில் கேதுவும், அட்டமஸ்தானத்தில் ராகுவும் சனியுடன் இணைவதும் விரைய குருவாக அமர்வதும் நடைபெறுவதால் புதிய முயற்சிகளை கைவிட்டு, இருக்கும் விடயங்களை சீராக செய்து கொண்டு வருவதற்கான பாதையை தெரிவு செய்தால் வளம் பெறுவீர்கள்.

வரும் 26-04-2025 முதல் ராகு / கேது பெயர்ச்சியாகி, தனஸ்தானத்தில் கேது அமர்ந்து ஞான மார்க்கத்தில் உங்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பார். ஆன்மீக அன்பார்களின் தொடர்புகள் மூலம் மேன்மை பெற செய்வார். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல், புதிய நண்பர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல், வெற்றியின் இலக்கை மட்டும் நினைத்து செயல்படுவது உங்களுக்கு நன்மையை தரும். அட்டம ராகு சனியுடன் சேருவது தடைகள் இருந்தாலும் உங்களின் பலம் நன்மையையே தரும்.

விரைய குரு ராசிக்கு பணிரெண்டில் ஆறாம் இடத்து அதிபதி அமர்வது கெட்டவன் கிட்டில் கிட்டிடும் ராஜயோகம் என்பது உங்களுக்கு ஊக்கத்தை தரும். மேலும் குரு பார்க்க கோடி நன்மை என்பது போல அட்டம சனி, ராகுவை பார்ப்பதால் அடுத்த குரு பெயர்ச்சி வரையிலும் உங்களுக்க எந்த விதமாக குறைகளுமின்றி நன்மையையே குரு தருவார். அதனால் இந்த ஆண்டு முழுவதும் அதிகபட்ச நன்மையே உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  

திங்கள், செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட நிறங்கள்: 

வெண்மை, சிவப்பு, மஞ்சள்,

அதிர்ஷ்ட எண்கள்: 

1, 2, 3.

பரிகாரங்கள்:

ஞாயிறுக்கிழமை மாலை 04.30 - 06.00 மணிக்குள் நவகிரக வழிபாடும், பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி சிவப்பு அரளி பூ மாலை இட்டு வர சகல காரியமும் தடையின்றி வெற்றியை தரும்.

சிம்மம்

கனவுகளை நனவாக்க திட்டமிட்டு செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் ஜென்ம கேதுவும், களத்திர ராகுவும் சனியுடன் இணைவது குடும்ப நிலையில் சில முடிவுகளை எடுக்க வேண்டி சூழ்நிலைகள் உருவாகும். அடுத்த குரு பெயர்ச்சியாகி லாபஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் வளர்ச்சிக்கு பெரிய உறுதுணையாக அமையும்.

இந்த ஆண்டு 26-04-2025 முதல் ஜென்ம கேதுவாக அமர்வது ஆன்மீக செயல்களில் ஈடுபாடுகள் கொள்வதும், ஆன்மீக தொடர்புகள் உண்டாகும். எதிலும் முதன்மை பெறும் வாய்ப்புகள் அமையும். சரியான பாதையை தெரிவு செய்து முன்னேற்றம் காண்பீர்கள். களத்திர ஸ்தானத்தில் சனியுடன் ராகு சேர்வது உங்களின் குடும்பத்தில் சில சச்சரவுகள் வந்து மறையும். எதையும் முன்கூட்டியே யோசித்து செய்வது உங்களுக்கு பக்கபலமாக அமையும். வெற்றியின் இலக்கை குறிகோளாக செயல்பட்டு வெற்றியைப் பெறுவீர்கள்.

இதுவரை குரு தொழில்ஸ்தானத்தில் அமர்ந்திருந்தது. உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் பல்வேறு சோதனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை களிலிருந்து விடுபட்டு.. இனி தொழில் முன்னேற்றமும், லாபஸ்தானத்தில் குரு அமர்ந்து முயற்சிகளுக்கு வெற்றியையும், புத்திர பாக்கியஸ்தானத்தையும் பெறுவீர்கள். இதுவரை களத்திர ஸ்தானம் கெட்டதால் பல பிரச்சனை இருந்து வந்தது. குரு பார்வையால் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இருப்பீர்கள். எந்த கெடுபலனும் உங்களுக்கு வராமல் குரு அருளால் சிறப்பாக இருப்பீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  

ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட நிறங்கள்: 

சிவப்பு, மஞ்சள், ஒரஞ்சு.

அதிர்ஷ்ட எண்கள்: 

1, 3, 6, 9.

பரிகாரங்கள்:

சனிக்கிழமைகளிலும், ஞாயிறுகிழமைகளிலும் தொடர்ந்து பைரவருக்கு செவ்வரளி பூ மாலையும், நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி வர உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள்.

கன்னி

சாதிக்க நினைத்ததை உடனே நிறைவேற்ற முயற்சிக்கும் கன்னி ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆறாமிடத்தில் ராகுவும், விரைய ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து வெளிநாட்டு தொடர்புகளையும், எதிர்ப்புகளிலிருந்தும் மீண்டுவர வாய்ப்புகள் அமையும். தொழில் ஸ்தானத்தில் ஆண்டின் துவக்கத்தில் குரு அமர்வது தொழிலில் சில மாற்றங்களை பெறுவீர்கள். ஏற்கனவே செய்து வரும் தொழிலை விட்டு, வேறு தொழிலில் ஈடுபடுவதும். உத்தியோகத்தில் இருப்பவர்கள். சொந்த தொழிலில் ஈடுபடுவது உண்டாகும்.

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு 26-04-2025 முதல் ராகு ஆறாமிடத்தில் சனியுடன் இணைவது மறைமுகமான எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள். நீண்ட நாள் உடல் உபாதைகளிலிருந்து விடுவிக்கபட்டு உடல் நலன் பெறுவீர்கள். மற்றவர்கள் பேசும் ஆசை வார்த்தைகளை நம்பாமல், உங்களுக்கு தெளிவாக தெரியும் விடயங்களை மட்டும் உறுதியுடன் செயல்பட்டு நன்மை பெறுவீர்கள்.

இந்த ஆண்டு 11-05-2025 முதல் குரு பாக்கியஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்தில் அமர்வது பொதுவாக குரு பத்தில் இருந்தால் பதவி பறிபோகும் என்பார்கள். அமர்வது உங்கள் ராசிநாதன் வீடு மற்றும் மிதுனத்தில் அமரும் எந்த கிரகமும் கெடுபலன் தருவதில்லை என்பதால் தொழிலில் எந்த பாதிப்புகளும் வராது, என்றாலும் ஓன்லைன், தொழிலில் முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். ஆனால் எந்தவித ஆசை வார்த்தைகள் சொன்னாலும் அதில் உள்ள உண்மைத்தன்மையை உணர்ந்து செயல்படுவது மிகவும் முக்கியம். பொதுவாக இந்த ஆண்டு முழுவதும் உங்களின் எண்ணம் முழுமையாக நிறைவேறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  

புதன், வியாழன், வெள்ளி.

அதிர்ஷ்ட நிறங்கள்: 

பச்சை, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட எண்கள்: 

3, 5, 6.

பரிகாரங்கள்:

ஞாயிறு அன்று ராகு காலத்தில் (04.30 - 06.00) பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் மூன்று ஏற்றி, எள் கலந்த அன்னத்தை நைவேத்தியமாக வைத்து வேண்டிக் கொள்ள, சகல காரியத்திலும் நன்மை உண்டாகும்.

துலாம்

வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகளை தெரிவு செய்து, அதனை நோக்கி பயணிக்கும் துலாம் ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு துவக்கத்தில் ராகு / கேது பெயர்ச்சியும் அடுத்து குரு பெயர்ச்சி வருவது உங்களின் ராசிக்கு மிகப்பெரிய நன்மைகள் உண்டாகும். ராகு ஐந்தாமிடத்திலும் கேது லாபஸ்தானத்தில் அமர்கிறார்கள். குரு பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது சகல காரியங்களிலும் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும்.

இந்த ஆண்டு 26-04-2025 முதல் ராகு பஞ்சம ஸ்தானத்திலும் கேது லாபஸ்தானத்தில் அமர்வது ஒன்றரை ஆண்டு பலன்கள் தொடரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு அமர்வது, பூர்வீக சொத்துகள், குல தெய்வ வழிபாடுகள் சிறப்பாக அமையும். எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. அன்னியர் அறிமுக இல்லாத நபர்களை நம்பி முதலீடு செய்தல் தவிர்ப்பது நல்லது. கேது லாபஸ்தானத்தில் அமர்வது நீங்கள் செய்யும் தொழிலில் சிறப்பான வளர்ச்சியை பெற்று தருவார். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள், கூடுதல் மரியாதையும் பெறுவீர்கள்.

குரு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து ராசியையும் முயற்சி ஸ்தானத்தையும் பார்வை இடுவதும். உங்களின் யோகாதிபதி சனி / ராகுவும் சம்மந்தபடுவதை ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் நீங்கள் நினைத்ததை அடையும் வாய்ப்புகள் அமையும். எந்த தொழில் செய்தாலும் அதில் முழு ஈடுபாடுகளுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாட்கள் வராமல் இருந்த தொகை விரைவில் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் அமையும். சொந்த காலில் நின்று தொழில் செய்வீர்கள். அடுத்த வரை நம்பிக்கொண்டு இருக்காமல் வளம் பெறும் வழியை கண்டு, அதில் கவனம் செலுத்தி நலம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  

வெள்ளி, சனி, வியாழன்.

அதிர்ஷ்ட நிறங்கள்: 

வெண்மை, நீலம், மஞ்சள்.

அதிர்ஷ்ட எண்கள்: 

3, 6, 8.

பரிகாரங்கள்:

ஞாயிறு மாலை ராகு காலத்தில் (04.30 - 06.00) பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி முந்திரி பருப்பு மாலை கட்டி போட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக நடக்கும்.

விருச்சிகம்

துணிச்சலுடனும், எதிர்பார்ப்புடனும் செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு துவக்கத்தில் ராகு / கேது பெயர்ச்சியும், பின்பு குரு பெயர்ச்சியும் வருகிறது. தடைகளில் இருந்து மீண்டு வர உங்களின் முயற்சி நல்ல பலனை பெற்று தரும். கேந்திரத்தில் ராகு / கேது அமர்வது தொழிலிலும், உத்தியோகத்தில் சில சங்கடங்கள் வந்து மறையும். இதுவரை குரு பார்வையாலும், சனியின் பார்வையினாலும் ராசிக்கு வந்த துன்பம் நீங்கி இருந்தது. தற்போது குரு பார்வை இல்லாததால் சற்று கவனமுடன் இருப்பது உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

பொதுவாக கேந்திர ஸ்தானத்தில் ராகு / கேது அமர்ந்தால் பணபர வசதிகளை பெற்று வருவார்கள். ராகு நான்காமிடத்தில் சனியுடன் சம்மந்தபடுவதால் சனி / ராகுவை குரு பார்வை இடுவதால் குரு பார்க்க கோடி நன்மை என்பதால்.. குருவின் அருளால் ராகு கெடுபலன்களை குறைத்து கொள்வார். சனியும் முழு வேகத்தையும் குறைத்து கொள்வார். தொழில் ஸ்தான கேது தொழிலில் புதிய முன்னேற்றம் பெற செய்வார் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் அமையும். சரியான பாதையை தெரிவு செய்வது நல்லது.

குரு உங்களின் ராசிக்கு எட்டாமிடத்தில் மறைவு பெறுவது நல்லதல்ல. ஓன்லைன் முதலீடு செய்யும் முன் சற்று யோசித்து செய்தல் நன்மையை பெற்றுத் தரும். கேள்வி கேட்டு தெளிவு பெற்ற பின்பு முதலீடு செய்வது நல்லது. எனினும் கிடைக்கக் கூடிய சில வாய்ப்புகள் தள்ளி போடும். எதையும் கலந்து ஆலோசனை செய்த பின்பு முடிவு செய்வது நல்லது. தன, பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு அட்டமஸ்தானத்தில் அமர்வது நன்மை தராது என்றாலும் மறைவிடத்திலிருந்து மறைவு இடங்களை பார்ப்பதால் உங்களுக்கு சில நேரம் நன்மையும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  

செவ்வாய், புதன், வெள்ளி.

அதிர்ஷ்ட நிறங்கள்: 

ஓரஞ்சு, பச்சை, வெண்மை.

அதிர்ஷ்ட எண்கள்: 

5, 6, 9.

பரிகாரங்கள்:

ஞாயிறு மாலை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து தயிர் அன்னம் நைவேத்தியம் வைத்து வழிபட்டு ஒன்பது நல்லெண்ணெய் தீபமேற்றி வேண்டுக் கொள்ள சகல தடைகளும் நீங்கி நன்மை பெறுவீர்கள்.

தனுசு

எந்த முடிவுவையும் விரைவாக எடுத்து செயல்படுத்தும் தனுசு ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு துவக்கத்தில் ராகு மூன்றாமிடத்திற்கும், கேது பாக்கிய ஸ்தானத்திலும் அமர்வதும், அடுத்து குரு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது நல்ல முன்னேற்ற காலமாக அமையும். தெரிந்த செயல்களில் உறுதியுடன் இறங்கி வேலை செய்வீர்கள். குடும்ப நன்மைகளை கருதி நீங்கள் எடுக்கும் அதிரடி முடிவுகள் வரவேற்கும்படி அமையும்.

இந்த ஆண்டு 26-04-2025 அன்று ராகு மூன்றாமிடத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுகிறார் மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் சனியும் / ராகுவும் இணைவதால் நீங்கள் எந்த முடிவுகள் எடுத்தாலும் முழுமையான வெற்றியை பெறுவீர்கள். நீங்கள் முடிவு எடுத்த பிறகு வேறு எந்தவித மாற்றமும் உண்டாகாது. எடுத்த முடிவின் படி செயல்படுவது  நல்ல காலமாக அமையும். சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கப் பெறுவீர்கள். கேது பாக்கியஸ்தானத்தில் இருப்பது பாக்கியஸ்தானத்தில் இருந்து குருவை பார்வை இடுவது சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். குருவும் / கேதுவும் இணைவது பொருளாதாரத்தில் சிறப்பான பலன் உண்டாகும்.

குரு 11-05-2025-ல் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது உங்களின் வாழ்வில் நல்ல பொருளாதார மாற்றங்களையும், வளர்ச்சியையும் பெற்று தரும். குரு ஐந்தாம் பார்வையாக லாபஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மூன்றாமிடத்தையும் பார்ப்பது இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான நன்மை பெறுவீர்கள். 08.03.2026 வருட முடிவில் சனி நான்காம் இடத்திற்கு மாறும் வரையில் உங்களின் வாழ்வில் அற்புதமான மாற்றங்களும், வளர்ச்சியும் அமைய பெறுவீர்கள். நினைத்தபடி சகல காரியமும் வெற்றியை தரும். குடும்ப நன்மைகளுக்கு ஆன்மீக ஈடுபாடு கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  

வியாழன், சனி, திங்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: 

மஞ்சள், வெண்மை, நீலம்.

அதிர்ஷ்ட எண்கள்: 

2, 3, 8.

பரிகாரங்கள்:

செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து துவரம் பருப்பு அன்னம் நைவேத்தியம் வைத்து நெய் தீபமேற்றி தொடர்ந்து வேண்டிவர சகல காரியமும் நினைத்தபடி சிறப்பாக அமையும்.

மகரம்

சிந்தனைகளை தொடர்ந்து செயல்படுத்தும் மகர ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு துவக்கத்தில் மூன்றாமிட ராகு தனஸ்தானத்திலும் பாக்கிய ஸ்தானத்தில் கேது அட்டம ஸ்தானத்திலும் அமர்வதுடன் அடுத்து குரு பார்வையிலிருந்து ஆறாமிடத்தில் மறைவு பெறுவதும் உங்களுக்கு சிறுசங்கடங்கள் இருந்தாலும் சனி ஆண்டின் இறுதியில் பெயர்ச்சியாகி மூன்றாமிடத்திற்கு செல்லும் போது இதுவரை ஏழரை சனியாக இருந்த நிலை விடுபட்டு யோக சனியாக வருவது சிறப்பான பலன் தரும்.

இந்த ஆண்டு மூன்றாமிடத்தில் இருந்த ராகு தனஸ்தானத்தில் அமர்வது பேச்சில் மிகபெரிய மாற்றம் உண்டாகும். எதையும் செய்தே தீரவேண்டும் என்ற நினைவுகளை மாற்றிக்கொள்ளாமல் பிடிவாதமாகவே இருப்பீர்கள். சொன்ன சொல்படி நடக்க வேண்டுமென்று பிறரை எதிர்பார்ப்பீர்கள். கேது அட்டம ஸ்தானத்தில் இருப்பதால்... தேவையற்ற விடயங்களில் தலையிடுவதைக் குறைத்து கொள்வது நல்லது. அரசியலிலும், அதிகாரத்திலும் இருப்பவர்களிடம் சற்று கவனமாக இருப்பதும் நல்லது. ஒரு வார்த்தையை ஒன்பதாக திரித்து விடுவார்கள். இதனால் தர்ம சங்கடமான நிலை உண்டாகும்.

இதுவரை குரு ராசியை பார்த்து கொண்டு இருந்தார். காரியங்கள் தடையின்றி நடந்து வந்தது. குரு ஆறாமிடத்தில் மறைவு பெறுகிறார். மறைவுஸ்தானாதிபதி மறைவு பெறுவது உங்களுக்கு நற்பலன்களை தரும். குரு தொழில் ஸ்தானத்தினை பார்வை இடுவதால் தொழிலில் நற்பலன்களும் செய்யும் தொழிலில் வளர்ச்சியும் உண்டாகும். குருவின் அருளால் உங்களின் செயல்களில் ஊக்கமும், தெளிவும் உண்டாகும். மறைமுக எதிரிகளின் செயல்பாடுகள் சற்று தாழ்ந்து இருக்கும். குடும்பத்தில் சிலருக்கு சுபகாரிய வாய்ப்புகள் அமையும். சனி பெயர்ச்சிக்கு பின்பு நல்ல தொழில் வளம் மேன்மை பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  

சனி, செவ்வாய், வெள்ளி.

அதிர்ஷ்ட நிறங்கள்: 

நீலம், வெண்மை, ஓரஞ்சு.

அதிர்ஷ்ட எண்கள்: 

6, 8, 9.

பரிகாரங்கள்:

ஞாயிறு மாலை ராகு காலத்தில் (04.30 - 06.00) பைரவருக்கும், நவ கிரகங்களுக்கும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்கு தயிர் அன்மை வைத்து வேண்டிக் கொள்ள நல்ல காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

கும்பம்

தன் கடமை செய்து, பிறரிடம் பலனை எதிர்பார்க்காத கும்ப ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த ராகு ஆண்டின் துவக்கத்தில் ராசியில் ராசிநாதனுடன் இணைவு பெறுவதும் அடுத்து சுகஸ்தானத்தில் அமர்ந்த குரு இனி பூர்வ புண்ணியஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் ராசிக்கு சிறப்பான நற்பலனை பெற்றுத் தரும். எதையும். யோசித்து செய்யும் உங்களிடம் வலிமையும், திறமையும் உண்டாகும்.

இந்த ஆண்டு வரும் 26-04-2025 முதல் ராகு ராசியிலும், ஏழாமிடத்தில் கேதுவும் அமர்ந்து இந்த படி பலன் தருகிறார்கள். சனியுடன் ராகு இணைவது மந்திரீகத்தின் மீது நம்பிக்கை வைத்து அது சம்மந்தமான தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். சிலரின் சுய ஜாதகத்தில் சனி கெட்டிருந்தால் மந்திரீகத்தால் பாதிப்பு உண்டாகலாம். எனினும் குரு பார்வை ஒராண்டு காலம் இருப்பதால் பாதிப்புகள் எதுவும் வராமல் தடுத்து விடுவார். களத்திரஸ்தானத்தில் கேது கூட்டு தொழில் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் வெற்றி பெற செய்வது எதிலும் உறுதியுடன் செயல்படுதல். அரசாங்க பதவி, அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் அமையும்.

இந்த ஆண்டு குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வது உங்களின் ராசியை பார்ப்பது மிக சிறந்த நற்பலன் உண்டாகும். தடைபட்ட திருமண உடனே நடக்கும். சிலருக்கு மறுமண யோகம் உண்டாகும். சிறப்பான பயிற்சிகள் எடுத்த கொண்டு செயல்படுவீர்கள். முக்கிய காரியங்களில் முழு ஈடுபாடுகள் கொண்டு செயல்படுவீர்கள். உங்களின் லாபஸ்தானத்தை குரு பார்வை இடுவது தொழிலில் ஒரளவு முன்னேற்றம் உண்டாகும். கேட்டவருக்கு கேட்டதை தினமும் கொடுக்கும் தெய்வ நம்பிக்கையுடன் வணங்கி நீங்கள் வேண்டியதை பெறுவீர்கள். கேது குருவை பார்ப்பதால் ஆன்மீகவாதிகளின் தொடர்பு உங்களுக்கு ஏற்படும். மகான்களின் ஆசி பூரணமாக கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  

சனி, ஞாயிறு, வியாழன்.

அதிர்ஷ்ட நிறங்கள்: 

நீலம், சிவப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட எண்கள்: 

3, 7, 8.

பரிகாரங்கள்:

அம்மன் வழிபாடு, வராஹி வழிபாடுகள் செய்து தேங்காயில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றி வேண்டிக் கொள்ள மானசீகமாக சிறப்பான நற்பலன் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.

மீனம்

சகல வித்தைகளையும் கற்று கொள்ள விரும்பும் மீன ராசி வாசர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஜென்ம ராகு ஆண்டு துவக்கத்தில் விரைய ராகுவாக அமர்வதும் ஆறாமிட கேதுவாகவும் தொடர்ந்து மூன்றாமிட குரு நான்காமிடத்தில் அமர்வதும் தவிர்க்க முடியாத வெளிநாட்டு பயணம் வெளியூர் பயணங்களாக அமையும். சுகஸ்தானத்தில் ராசிநாதன் குரு அமர்வது நமது உடல்நலனின் பல்வேறு பிரச்சனைகளை தரும் என்பதால் உடல்நலனை பேணி பாதுகாத்து கொள்வது மிக சிறப்பு. குரு பார்க்குமிடம் சிறப்பு என்பது தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும், மறைவு ஸ்தானங்களான அட்டம ஸ்தானம், விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் விரையம் உண்டாகாமல் காப்பாற்றுவார்.

இந்த ஆண்டு ஜென்ம ராகு இனி விரைய ( 26-04-2025 முதல் ) ஸ்தானத்தில் அமர்வது உங்களின் பூரவீக வீடுகள் அல்லது சொத்துகளை விற்பனை செய்து வேறு இடம் மாறுவதற்கு வாய்ப்பு அமையும். இந்த ஆண்டின் இறுதி வரை விரைய சனியோடு ராகு இருப்பதும், பின்பு சனி பெயர்ச்சியாகி ஜென்ம சனியாக அமரும் போது வேறு இடத்திற்கு மாறுவீர்கள். கேது ஆறாமிடத்தில் அமர்வது திரைமறைவில் இருந்து துன்பம் தந்து வந்தவர்களை விட்டு விலகி விடுவீர்கள்.

உங்களின் ராசிநாதன் எங்கிருந்தாலும் நன்மை செய்வார். உங்களின் ராசிக்கு 11.05.2025 முதல் சுகஸ்தானத்தில் பெயர்ச்சியாகி அட்டமஸ்தானத்தையும், தொழில்ஸ்தானத்தையும் விரையஸ்தானத்தையும் ஓராண்டு காலம் பார்வை இடுவதால் சுபவிரையம் உண்டாகும். புதிய வீடு, மனை, இடங்கள் வாங்கும் யோகம் உருவாகும். கடந்த கால விரைய செலவுகள் வராமல் நீங்கள் உங்களுக்கு பாதுகாப்பு சூழ்நிலையை உருவாக்கி கொள்வீர்கள். எதையும் முன்கூட்டியே யோசித்து செய்து நன்மை அடைவீர்கள். தேவை இல்லாதவர்களை பற்றி புரிந்து கொண்டு அவரை விட்டு ஒதுங்கி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  

வியாழன், வெள்ளி, ஞாயிறு.

அதிர்ஷ்ட நிறங்கள்: 

மஞ்சள், வெண்மை, சிவப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 

3, 4, 6, 9.

பரிகாரங்கள்:

செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு நெய் தீபமிட்டு சிவப்பு நிற பூ மாலை சாற்றி வேண்டிக் கொள்ளவும். சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்க மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள சகல நலன்களும் உண்டாகும்.

கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15
news-image

சூரிய பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-01-29 20:43:33
news-image

செல்வத்தை அதிகரிப்பதற்கான பிரத்தியேக விருட்ச வழிபாடு

2025-01-27 13:09:12
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தமிழ் வழி எண்...

2025-01-25 16:24:32
news-image

தீபம் ஏற்றுவதில் கவனம் தேவையா..?

2025-01-24 16:44:40
news-image

வெற்றியை உண்டாக்கும் மந்திர வழிபாடு

2025-01-23 16:12:37