எம்மில் பலருக்கும் அவர்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையிலும் தேவைக்கு ஏற்பவும் கடன் வாங்கத்தான் செய்கிறார்கள். கடன் வாங்குபவர்களில் எண்பது சதவீதத்தினர் அந்த கடனை முறையாக திருப்பி செலுத்தி வருகிறார்கள். ஆனால் இருபது சதவீதத்தினருக்கு இந்த கடன் சுமையாகிவிடுகிறது.
இதனால் மன அழுத்தமும் ஏற்படுகிறது. இந்நிலையில் கடனை வெற்றிகரமாக செலுத்தி வருபவர்கள் பின்பற்றும் ரகசிய சூத்திரத்தை பலரும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். எம்முடைய ஆன்மீக முன்னோர்களும், சோதிட நிபுணர்களும் இது தொடர்பாக வழங்கிய சூட்சம குறிப்புகளை பின்பற்றி தான் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த சூட்சமம் என்ன? என்பதை தொடர்ந்து காண்போம்.
அவசரத்திற்காகவோ அல்லது அவசியத்திற்காகவோ மற்றவரிடம் வாங்கிய கடனை முழுமையாக வட்டியுடனோ அல்லது வட்டி இல்லாமலோ எந்த முறையில் வாங்கி இருந்தாலும் அதனை திருப்பி செலுத்திட வேண்டும் என முதலில் மனதளவில் உறுதி ஏற்க வேண்டும்.
அதன் பிறகு செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஓரை தருணத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் செவ்வாய்க் கிழமையில் குளிகை நேரம் எப்போது செவ்வாய் ஓரை தருணத்துடன் இணைந்து வருகிறது என்பதையும் தெரிவு செய்து கொள்ள வேண்டும். இந்த தருணத்தை அன்றைய சூரிய உதய நேரத்துடன் ஒப்பிட்டு துல்லியமாக கணக்கிட வேண்டும்.
அந்த தருணத்தை தெரிவு செய்து, கடன் வாங்கியவர்களிடம் , 'கடனை திருப்பி செலுத்துகிறேன்' என சொல்லிவிட்டு ஒரு சிறிய அளவிலான தொகையை கொடுத்து விட வேண்டும். இந்த தருணம் தான் உங்களுடைய கடன் முழுமையாக தீர்வதற்கான சூட்சமத்தை உணர்த்துகிறது. இந்த நேரத்தை பயன்படுத்தி கடனை திருப்பி செலுத்த தொடங்கினால் உங்களுடைய கடன் சுமை நாளடைவில் படிப்படியாக குறைவதுடன் சேமிப்பும் சிறிது சிறிதாக உயர்வதை அனுபவத்தில் காணலாம்.
அதே தருணத்தில் செவ்வாய் கிழமையில் செவ்வாய் ஓரையில் பவ கரணம் நடைபெற்றிருந்தாலும் அந்த தருணத்திலும் கடனை திருப்பி செலுத்த தொடங்கினால், கடன் படிப்படியாக குறைந்து, சேமிப்பு உயர்வதும் உங்களின் மன அமைதி அதிகரிப்பதும் அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM