யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க ஜனாதிபதி அனுமதி 

31 Jan, 2025 | 04:57 PM
image

யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தினை திறக்க உத்தியோகபூர்வ அனுமதியினை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கினார்.

இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியாக தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கலினை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, மேலும் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (31) காலை  10 மணிக்கு ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கடவுச்சீட்டு அலுவலகத்தினை யாழ். மாவட்ட செயலகத்தில் திறப்பதற்கு வழிவகைகள் எதுவும் இருக்கிறதா என யாழ்ப்பாண மாவட்ட செயலக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபனை ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் வழங்கிய மாவட்ட  பிரதீபன், எமது மாவட்ட செயலகத்தில் இடப்பற்றாக்குறை இருக்கிறது. இருப்பினும் வடக்கு மக்களுக்கு தேவையான ஒன்றாக கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுவதால் அதற்கான இடத்தை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கலாம் என பிரதீபனன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா,  ஜெ.றஜீவன், இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், திணைக்களத் தலைவர்கள்,  பணிப்பாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித பாவனைக்குதவாத தேயிலைத்தூளுடன் இருவர் கைது...

2025-03-18 16:40:34
news-image

பட்டம் பெற்றிருந்தாலும் பச்சை குத்தியிருந்தால் பொலிஸ்...

2025-03-18 16:38:20
news-image

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள்...

2025-03-18 16:05:35
news-image

வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப்...

2025-03-18 15:57:57
news-image

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்...

2025-03-18 15:35:08
news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:30:43
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53