யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள வடக்கு, கிழக்கை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதே எமது நோக்கம் - ஜனாதிபதி 

31 Jan, 2025 | 04:21 PM
image

(எம்.நியூட்டன்)

வடக்கு, கிழக்கு மாகாணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது. ஆகவே, விசேட கவனம் செலுத்தி பொருளாதார ரீதியில் கிராமங்களை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் (31) விஜயம் செய்த ஜனாதிபதி, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் அங்கு கருத்து தெரிவிக்கையிலே  இவ்வாறு கூறினர்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. காணிகள் பாதுகாப்பு தேவைக்காகவும் அபிவிருத்திக்காகவும் கையகப்படுத்தப்பட்டுள்ளதென கூறப்படுகிறது. ஆனால், எமது கொள்கையிலே மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கூறியுள்ளோம். 

எனவே, மக்களின் காணி எத்தகைய அபிவிருத்திக்கானது என்பதை பார்த்து பயனுள்ளது என்றால்தான் அதனை கையகப்படுத்த முடியும். அவ்வாறு கையகப்படுத்த முடியுமென்றால் மக்களின் ஒத்துழைப்புடன் அதற்கான இழப்பீட்டை கொடுத்து, அதனை செயற்படுத்த வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக  முப்படையிடம் காணிகள் உள்ளதென்றால் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். 

இதேவேளை வலிகாமம் வடக்கு கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை  நாம் பயன்படுத்தப் போவதில்லை. அதனை மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். அதற்கான திட்டத்தை தயாரித்து எமக்கு அனுப்புங்கள். மக்களுக்கு பயனுள்ளதாகவே அத்திட்டம் இருக்க வேண்டும். 

ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகத்துக்கோ, சுற்றுலாத்துறைக்கோ வேறு திட்டங்களுக்கோ வழங்குவதென்றால் அதற்கான முறையான திட்டங்களை வகுப்பதோடு அவை மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும்.

அரச நிர்வாகத்தில் 30 ஆயிரம் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. ஆனால், இந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப முடியாது. வேலைவாய்ப்பு இல்லாமல் பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை இந்த இடத்திற்கு உடனடியாக நிரப்பிவிட முடியாது. வெற்றிடங்களின்  தகுதிக்கு ஏற்ப நடைமுறைகளை பின்பற்றியே நிரப்பப்பட வேண்டும். அரச உத்தியோகத்தர்கள் ஆரம்பப் படிநிலையில் வெற்றிடங்கள் இல்லை. அதற்கு அடுத்த கட்டங்களுக்கே வெற்றிடங்கள் உள்ளன. ஏற்கனவே, அரச உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்கின்ற நடைமுறைகளைப் பின்பற்றி அடுத்த நகர்த்தலை செய்ய வேண்டும். அதன்போது உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இதேபோல் பொலிஸ் திணைக்களத்துக்கு ஆளணி தேவையாக உள்ளது. சுமார் 21 ஆயிரத்துக்கு மேற்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இதனையும் உடனடியாக நிரப்பிவிட முடியாது. பொலிஸ் திணைக்களத்தில் மொழிபெயர்ப்புக்கும் ஆளணி தேவையாக உள்ளது.  இதனை நிவர்த்தி செய்தாலே பொலிஸ் நிலையங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால், மொழிபெயர்ப்புக்கு ஏற்ற ஆளணி தற்போது இல்லை. பொலிஸ் சேவைக்கு தமிழ் இளைஞர்கள், பெண்கள் இணைவதில்லை. அவர்கள் இணைந்துகொண்டாலே முறையான பயிற்சிகள் வழங்கி அவர்களை செயற்படுத்திக் கொள்ளலாம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடற்தொழிலாளர் பிரச்சினை நீண்டகாலமாக உள்ளது. அதனை இராஜதந்திரமாக அணுக வேண்டியுள்ளது. படிப்படியாக இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும். இதற்காக உயரிய பங்களிப்பை செய்வேன்.

இந்த நாட்டில் அரசியல் மாற்றம்தான் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் பின்னடைவில் தான் உள்ளது. அபிவிருத்திகள் பின்னடைவில் தான் உள்ளன. பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால் அது போதிய முன்னேற்றமாக இல்லை.

மாற்றங்களை மக்கள் காணவேண்டும். கடந்த காலங்களில் பல்வேறுபட்ட  ஊழல்களும் கொள்ளையடிப்புகளும் அபிவிருத்தி என்றும் அரைகுறை வேலைகளே இடம்பெற்றுள்ளன. இதனை மாற்றியமைக்க வேண்டும். மக்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். கிராமங்கள் முன்னேற்றமடைய வேண்டும். இதில் தான் எமது மாற்றங்களை காண முடியும்.

கடந்த காலங்களில் தென்னிலங்கை அரசு அல்லது தெற்கு அரசுகள் வடக்கு அரசுகளை அல்லது வடக்கு, கிழக்கை சமனாகப் பார்ப்பதில்லை; அபிவிருத்தி செய்வதில்லை என்று கூறுவதுண்டு. ஆனால், எமது காலத்தில் அவ்வாறு இருக்க முடியாது. இந்த நாடு முழுவதுமே அபிவிருத்தி செய்யப்படும்போது வேறுபாடு காட்டாமல் கிராமங்கள் தோறும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். 

கிராமங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய கல்வி முக்கியமானது. நவீன தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டு முன்னேற்றமடையச் செய்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது. ஆகவே, விசேட கவனம் செலுத்தி பொருளாதார ரீதியில் கிராமங்களை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும். 

அரச அதிகாரிகள் முழுமையாக வேலை செய்யவேண்டும். அதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்...

2025-03-18 15:35:08
news-image

பச்சைக் குத்தினால் பொலிஸ் சேவையில் அனுமதி...

2025-03-18 15:48:01
news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:30:43
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13