(ஆர்.யசி)
கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டு இறந்தஒவ்வொரு நபருக்குமான நஷ்டஈடாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கவும் முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 25 இலட் சம் என்ற அடிப்படையில் வழங்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். மண்சரிவு பாதிப்பில் இருக்கும் நபர்களுக்கு மாற்று இடங்களை வழங்கி குறித்த பகுதிகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை எச்சரிக்கை வலயமாக பிரகடனப்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
வௌ்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவு அபாயம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அரசாங்கத்தின் சகல அமைச்சர்களை நேற்று சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் போது அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவைகளை செய்யும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சந்திப்பில் அனைத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் சகல மாவட்டங்களின் பிரதேச செயலகங்களுக்கும் தன்னிச்சையாக தீர்மானங்களை மேற்கொண்டு அதற்கமைய மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதேச சபைகளுக்கான அதிகாரங்கள் மற்றும் தேவைகளை அரசாங்கம் வழங்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காந்துகொண்டு கருத்து தெரிவித்த அரச தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன ஜனாதிபதி தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
அத்துடன் அனர்த்தத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுக்கும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு அரச அதிகாரிகளை ஜனாதிபதி நியமித்துள்ளார். இவர்கள் மூலமாக பொருள் சேதங்கள், சொத்து விபரங்கள் முழுமையாக கணக்கெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்டஈடுகள் அனைத்தும் கவனத்தில் கொண்டு சரியான வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 இலட்சம் ரூபாய் நட்டஈடும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பில் சேதத்திற்கு அமைய நிதி வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொரு நபர்களுக்கான நட்டஈடாக அந்தந்த குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கவும் தீமானிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள், சிறு வியாபாரிகள் ஆகிய அனைவருக்கும் அவர்களுக்கான நஷ்டஈடுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேதங்களுக்கு அமைய அவர்களுக்கான நட்டஈடு வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல் இலகு தவணை அடிப்படையில் வங்கிக் கடன்களை வழங்கவும் அரசாங்கத்தினால் ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் முப்படைகளின் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் துரிதமாக அவர்களை ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மைத்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் கிணறுகளில் உள்ள நீரை அகற்றும் நடவடிக்களை மேற்கொள்ள அதற்கான தொழிநுட்ப மற்றும் மனித வளங்களை நியமிக்கவும் தொண்டு நிறுவனங்களின் மூலமாக மகளுக்கான உதவிகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் குளோரின் இடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான குடிநீர் தேவைகளை வழங்கவும் சகல அதிகாரிகளுக்கும் வலியுறுத்திய ஜனாதிபதி சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான உடனடி தேவைகள் மற்றும் மருத்துவ வசதிகளை எந்த நேரமும் வழங்கும் வகையில் அவசர வைத்திய பிரிவுகளை நியமிக்கவும் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான அமைச்சர்கள் தத்தமது பிரிவுகளில் செயற்படும் அதே நிலையில் பாதிக்கப்படாத பகுதிகளை சேர்த்த அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு பிரிவுகளை பொறுப்பேற்று அடுத்த மூன்று மாத காலத்துக்கான சேவைகளை வழங்கவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். நேற்றைய கூட்டத்தில் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் சேவையாற்றும் பகுதிகளை தீர்மானித்து உடனடியாக அறிக்கை தயாரிக்குமாறும் சகலருக்கும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மண் சரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மாற்று இடங்களை வழங்கவும் அசாங்கம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக இரத்தினபுரி பகுதியில் மண்சரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக குறித்த இடத்தில் இருந்து வெளியேற்றி அந்த பகுதிகளை அரசாங்கம் தனதாக்க வேண்டும் எனவும் உரிய மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் மாற்று வீடுகளை அமைத்து கொடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் புதியாத சீருடைகள், பாடப்புத்தகங்கள், சப்பாத்துக்கள் மற்றும் ஏனைய தேவைகள் அனைத்தையும் வழங்க கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் எனவும் நிதி அமைச்சின் பூரண உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அனர்த்தங்களுக்கு இலங்கை தொடர்ச்சியாக முகங்கொடுத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து மக்களை முன்னாயத்தமாக செயற்படும் நடவடிக்கைகள் மற்றும் அனர்த்தங்களை சமாளிக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் அழிவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதுவரையிலான காலம் வரையில் பாதிப்புகளுக்கான மக்களுக்கான 126 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக தேவைகளுக்கான நிதியையும் ஒதுக்க ஜனாதிபதி தயாராக உள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM