கடும் மழையினால் அக்குறணை, அம்பத்தன்ன முதலான பகுதிகளில் பெருகும் ஆற்று நீரை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

31 Jan, 2025 | 02:15 PM
image

கடும் மழை காரணமாக அக்குறணை, அம்பத்தன்ன நகரங்களை அண்மித்த பகுதிகளில் பெருகிவரும் ஆற்று நீரை முழுமையாகக் கட்டுப்படுத்த பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் நேற்று (30) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இத்திட்டம் விரைவாக தயாரிக்கப்படும் எனவும், அதன்படி ஆரம்பகட்ட தரவு சேகரிப்பு இன்று (31) முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று கண்டி மாவட்ட செயலகத்தில் அக்குறணை, அம்பத்தன்ன ஆகிய நகரங்களில் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடலில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இணைந்திருந்தன. 

இதன்போது வெள்ள அபாயத் தடுப்புத் திட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு பேராதனை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

அவ்வேளை, இத்திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தங்கள் தரவுகளை பேராதனை பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டும் என அங்கு தீர்மானிக்கப்பட்டன. 

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதிக்குள் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்துக்கு தரவுகள் வழங்கப்படவுள்ளன.

அடைமழையின் காரணமாக மழை பெய்து சில மணித்தியாலங்களுக்குள் அக்குறணை, அம்பத்தன்ன, வெலகட வெள்ளம் பாதிக்கப்படும் எனவும் இதன் காரணமாக 10 அடிக்கு அதிக உயரத்தில் வெள்ளம் நிரம்பி நகரம் நீரில் மூழ்கும் எனவும் இக்கலந்துரையாடலின்போது குறிப்பிடப்பட்டுள்ளது. 

அக்குறணை நகரின் 14 வலயங்களில் உள்ள 222 இடங்கள் காரணமாக பிங்கா ஓயா ஊடாக மகாவலி கங்கைக்கு நீர் செல்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக கடந்த வருடங்களில் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அக்குறணை அபிவிருத்தித் திட்டத்தின் அமுலாக்கத்தில் புதிய நிர்மாணங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், இயற்கையான நீரின் ஓட்டத்துக்கு இடையூறான இடங்கள் பசுமை வலயங்களாகக் குறிப்பிடப்பட்டு, அங்கு நிர்மாணப்பணிகள்  முற்றாக தடைசெய்யப்படும் என்றும் முன்மொழியப்பட்டது.

அத்துடன், நகரின் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்தும்போது ஏ9 வீதியை மூடவேண்டிய நிலை ஏற்பட்டால் மாற்று வழிகளை பயன்படுத்துவது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துமாறு மாவட்டச் செயலாளர் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சி.எஸ். பண்டார, சிரேஷ்ட விரிவுரையாளர் பண்டுக நெலுவல, சிரேஷ்ட விரிவுரையாளர் கௌரி டி சில்வா, அக்குறணை பிரதேச செயலாளர் டி.ஆர்.கே.ஹென்னையா, அனர்த்த முகாமைத்துவ கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் ஈ.எம்.கே.என்.ஜயவீர முதலான அதிகாரிகள் இக்குழுவில் பிரசன்னமாகியிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29
news-image

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2026-07-16 15:33:42
news-image

83 சதவீத சிறைச்சாலை உயர் பதவிகள்...

2026-07-16 15:22:32
news-image

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல்...

2026-07-16 14:50:48
news-image

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக...

2026-07-16 14:41:36
news-image

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

2026-07-16 14:45:43
news-image

புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!

2026-07-16 14:01:41
news-image

யோஷித ராஜபக்‌ஷ, பாட்டி டெய்ஸிக்கு எதிரான...

2026-07-16 13:31:21
news-image

உயர்தர பரீட்சையை பிற்போடுவது தொடர்பான மனு...

2026-07-16 13:17:48
news-image

சுற்றாடல் அமைச்சு, ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்...

2026-07-16 13:03:33
news-image

எல் நினோ தாக்கத்தால் வறட்சி அதிகரிக்கும்...

2026-07-16 13:09:10
news-image

ஆசியா, ஆபிரிக்காவை இணைக்கும் பாலமாக இலங்கை...

2026-07-16 12:22:08