ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை மீட்டு தாருங்கள் ; பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கை வடக்கு ஆளுநரினால் ஐ.ஓ.எம்மிடம் கையளிப்பு

31 Jan, 2025 | 11:36 AM
image

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர்  ஐ.ஓ.எம்மிடம் கையளித்துள்ளார்.  

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும்,  புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ஐ.ஓ.எம்.) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழு தலைவர் கிறிஸ்டின் பார்ஸோவுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (30)  இடம்பெற்றது.

சந்திப்பின் போது, கிறிஸ்டின் பார்ஸோ, தான் முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும், வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிவது தனது பயணத்தின் நோக்கம் என ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.

அதன் போது, தற்போதும் யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைப்பாடுகள் அதிகளவில் இருக்கின்றன. உதவிகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடுதலான உதவி தேவைப்படுகிறது.

இளையோருக்கான வேலை வாய்ப்பு பெரும் சவாலாக இருக்கிறது. கடந்த காலங்களில் இயங்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றமை இதற்குக் காரணம்.

வேலை வாய்ப்பு இன்மையால், இளையோர் உயிர்கொல்லி போதைப்பாவனைக்கு அடிமையாகும் நிலைமையும் அதிகரித்துச் செல்கின்றது. முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து,  இதன் ஊடாக வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க எதிர்பார்கிறோம். 

வடக்கின் பல்வேறு தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு ஐ.ஓ.எம்மிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார். 

அத்துடன் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர்  ஐ.ஓ.எம்மிடம் கையளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-25 10:48:17
news-image

நாட்டில் சில பகுதிகளில் எட்டரை மணிநேரம்...

2025-03-25 10:42:16
news-image

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு...

2025-03-25 10:47:57
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 10:23:54
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23