அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்கள்- அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு

Published By: Rajeeban

31 Jan, 2025 | 10:28 AM
image

அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்களும் உள்ளனர் என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

2024 நவம்பர் 24ம் திகதி வரை நாடு கடத்துவதற்கான இறுதி உத்தரவிற்காக காத்திருக்கும் இதுவரை தடுத்துவைக்கப்படாத இலங்கையர்களின் எண்ணிக்கை 3065 என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்ட மற்றும்  ஏனைய சவால்கள் காரணமாக அனைவரையும்உடனடியாக நாடு கடத்த முடியாது என தெரிவித்துள்ள ஐசிஈ புகலிடக்கோரிக்கைகள் காரணமாகவும் வெளிநாட்டு அரசாங்கங்கள் ஒத்துழைக்காததன் காரணமாகவும் நாடு கடத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அனைத்து நாடுகளும் குடியுரிமை குறித்து ஆராயவேண்டும்,பயண ஆவணங்களை வழங்கவேண்டும், நாடு கடத்தப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் வரும் விமானங்களை  ஏற்கவேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா நாடு கடத்தியவர்களுடன் வரும் விமானங்களை ஏற்க மறுக்கும் நாடுகளையும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு பட்டியலிட்டுள்ளது எனினும் இந்த பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43