இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் 3 சீன போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

10 சிறிய படகுகளுடன்  5 மருத்துவக் குழுக்கள் சகிதம்  3  சீன போர்க் கப்பல்களும் வந்துள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

மூன்று போர்க் கப்பல்களிலும்  511 கடற்படை வீரர்களும் 204 கடற்படை அதிகாரிகளும் இலங்கை கடற்படையினருடன் இணைந்து  நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கை வந்துள்ளனர்.

இதேவேளை, தற்காலிக கூடாரங்கள், போர்வை விரிப்புக்கள், மழைக்கால காலணி,  மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் 3 கப்பல்களும் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.