(எம்.வை.எம்.சியாம்)
மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை பகுதியில் மது போதையில் பொலிஸ் ஜீப் வண்டியை செலுத்தி, முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கடந்த 28 ஆம் திகதி கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பெலெக்கட சந்தியை அண்மித்த பகுதியில் இரத்மலானை மெலிபன் சந்தியிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பொலிஸ் ஜீப் வண்டி இரத்மலானை ரயில் நிலைய வீதியிலிருந்து பெலெக்கட சந்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.
இதன்போது காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் வாகனம் செலுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் எனவும்அவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் சேவையாற்றுவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று புதன்கிழமை (29) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் மதுபோதையில் எவருடைய அனுமதியுமின்றி பொலிஸ் ஜீப்பை எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் இரத்மலானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM