எம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்வதற்கு ஆன்மீக முன்னோர்கள் அனைவராலும் எளிதாக மேற்கொள்ளப்படும் வழிமுறையைத் தான் பரிகாரமாக அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஆலயத்தில் இறை வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதை மட்டும் தான் பரிகாரமாகவும் ,பிரச்சனையை களையும் உபாயமாகவும் உபதேசித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு தோஷத்திற்கும் அதாவது திருமண தோஷம், புத்திர தோஷம், வாஸ்து தோஷம், கிரக தோஷம், குரு தோஷம்,சர்ப்ப தோஷம், சனி தோஷம், என ஒவ்வொரு தோஷத்திற்கும் எப்படி தீப வழிபாட்டின் மூலம் நற்பலன்களை பெறுவது என்பது குறித்தும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள்.
அந்த வகையில் உங்களுக்கும் அல்லது உங்களுடைய குடும்ப உறுப்பினர்களில் யாருக்கேனும் திருமணம் தொடர்பான தடை அல்லது தோஷம் இருந்தால் நீங்கள் அதற்குரிய ஆலயத்தை தெரிவு செய்து, அந்த ஆலயத்திற்கு குறிப்பிட்ட கிழமை ,குறிப்பிட்ட திதி ,குறிப்பிட்ட கரணம், ஆகிய தருணங்களில் சென்று அங்கு 21 தீபத்தை ஏற்றி வழிபட்டால் உங்களுடைய திருமணத்தடை அகன்று சுபகாரியம் விரைவாகவும், மனதிற்கு நிறைவாகவும் நடைபெறும்.
உங்களுடைய வளர்ச்சி சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டு தடைப்பட்டிருந்தால் சோதிட நிபுணர்களின் அறிவுரையையும், வழிகாட்டலையும் பெற்று அவர்கள் குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று அங்குள்ள இறைவனுக்கு 48 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
வேறு சிலருக்கு களஸ்திர ஸ்தானம் தோஷத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு களஸ்திர தோஷமாக உருவாகி இருக்கும். இதன் காரணமாக திருமண விடயத்தில் தொடர் தடை ஏற்படும். இவர்கள் ஆன்மீக முன்னோர்களின் வழிகாட்டலை பெற்று, குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று அங்குள்ள இறைவனுக்கு 108 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். இதன் பிறகு உங்களுடைய களஸ்திர ஸ்தானத்தின் வலிமை அதிகரித்து சுப காரியம் கைகூடும்.
வேறு சிலருக்கு அவர்களுடைய ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டிருக்கும். இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் கல்வி கற்பது தொடங்கி திருமணம், புத்திர பாக்கியம், வேலைவாய்ப்பு , தொழில் என பல விடயங்களில் தொடர் தடை , தாமதம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இவர்கள் அனுபவமிக்க சோதிட நிபுணர்களின் அறிவுரையுடன் அவர்கள் குறிப்பிடும் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள இறைவனுக்கு 21 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் பிரச்சனை முடிவுக்கு வந்து சுப பலன்கள் ஏற்பட தொடங்கும்.
உங்களுடைய ஜாதகத்தை அலசி ஆராயும் சோதிடர்கள் வாழ்நாள் முழுவதும் துர்க்கை அம்மனை தொடர்ந்து தரிசனம் செய்து வாருங்கள் என அறிவுறுத்தி இருப்பார்கள். இந்தத் தருணத்தில் நீங்கள் எப்போதெல்லாம் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு செல்கிறீர்களோ! அல்லது சிவாலயத்தில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதிக்கு சென்று துர்க்கையை வணங்கும்போது.. ஒன்பது தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் சுப பலன்களும், முன்னேற்றமும் கிடைக்கும்.
வேறு சிலருக்கு ஆன்மீக முன்னோர்கள் வாழ்நாள் முழுவதும் சிவபெருமானை வணங்கி வரும்படி கூறியிருப்பார்கள். இவர்கள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமான் சன்னதியில் 11 தீபங்களை ஏற்றி வழிபட்டால் சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
வேறு சிலருக்கு, 'வராகி அம்மனை தொடர்ந்து வழிபடுங்கள்' என எடுத்துரைத்திருப்பார்கள். நீங்கள் அருகில் இருக்கும் வராகி அம்மன் ஆலயத்திற்கு சென்று ஐந்து தீபங்களை ஏற்றி வழிபட தொடங்கினால் உங்களது கோரிக்கை நிறைவேறும்.
வேறு சிலருக்கு சிவாலயத்தில் இருக்கும் நவ கிரகத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும் என்றும் பரிகாரமாக சுட்டிக்காட்டி இருப்பார்கள். இந்த தருணத்தில் நீங்கள் நவகிரக சன்னதியில் ஒன்பது விளக்கினை ஏற்றி வழிபட தொடங்கினால் நவக் கிரகங்களால் ஏற்படும் தோஷம் அகலும்.
நவகிரகங்களில் குரு பகவானின் தோஷம் உங்களுக்கு இருந்தால் அதனை நீங்க நீங்கள் குரு பகவானின் ஆலயத்திற்கு சென்று அல்லது குரு பகவானின் சன்னதியில் 33 தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும்.
நவ கிரகங்களில் சனீஸ்வர பகவானின் தோஷம் உங்களுக்கு இருந்தால் அதனை அகற்ற சனிக்கிழமைகளில் நீங்கள் நவ கிரகத்தில் இடம் பிடித்திருக்கும் சனி பகவானுக்கு 9 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.
நவகிரகங்களில் ராகுவின் தோஷம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள நவ கிரகத்தில் ராகு பகவானுக்கு அருகே 21 தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும்.
எம்மில் சிலருக்கு கடுமையான புத்திர தோஷம் ஏற்பட்டிருக்கும். நீங்கள் பரிகாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு இருந்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இந்த தருணத்தில் நீங்கள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள நவ கிரகத்திற்கோ அல்லது சிவபெருமானுக்கோ புத்திர தோஷம் நீங்க பிரார்த்தனை செய்து 51 தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும் . அதன் பிறகு உங்களுடைய கோரிக்கை நிறைவேறி வீட்டில் மகிழ்ச்சி ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம்.
எம்மில் பலரும் ஆயுள் நீட்டிப்பிற்காகவும், ஆயுளில் எந்தவித பங்கமும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ஆயுள் விருத்திக்காகவும் தீபமேற்றி வழிபட வேண்டும் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். இவர்கள் அதற்குரிய பிரத்யேக ஆலயத்திற்கு சென்று அங்குள்ள சிவபெருமானை வணங்கி உங்கள் வயது என்னவோ! அதனை விட ஒரு விளக்கினை கூடுதலாக ஏற்றி வழிபட வேண்டும். இதன் மூலம் உங்களுடைய ஆயுள் வலிமை அடைவதுடன் ஆரோக்கியமும் மேம்படும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM