சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராசாவின் மறைவுக்கு விடுத்துள்ள இரங்கல் செய்திக் குறிப்பிலேயே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மிக நீண்ட காலமாக தமிழர் ஜனநாயக சாலையில் பயணித்த மாவை சேனாதிராசா என்ற தமிழ் தேசிய வாகனம் நின்றுவிட்ட சம்பவம் இன்று நிகழ்ந்தேவிட்டது. பல உணர்வு மிக்க தரிப்பிடங்களையும் கடவைகளையும் தமிழ் தேசிய அரசியல் தலைவர்களுடன் நான் கடந்து வந்துள்ளேன். இதிலேயே அண்ணன் மாவையுடன் மிக நீண்ட காலமாக நான் பயணித்தும் உள்ளேன்.
இன்றைய இந்த சோகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் பங்குகொள்கிறோம். எங்கள் அனுதாபங்களை அவரை இழந்து வாடும் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும், அவரது கட்சிக்கும், மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM