இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தனது ஐந்து தசாப்தகால அரசியல் வாழ்க்கையில், அறவழி போராட்டம், சிறைவாசம் என தமிழ் மக்களுக்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வந்தார். அவரின் மறைவானது தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அன்னாரது மறைவுச் செய்தி பெரும் மன வேதனையையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் மறைவானது தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். 1942 ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த மாவை சேனாதிராஜா, அரசியல் மற்றும் பொதுச் சேவை ஆகியவற்றில் தனது வாழக்கையை அர்ப்பணித்திருந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியும், திறமையான பேச்சாளரும், தைரியமான மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாவார். மாவை சேனாதிராஜா அவர்கள் தனது 19 ஆவது வயதில் அரசியல் பயணத்தை தொடங்கி தனது 83 ஆவது வயது வரை தமிழ் மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார்.
போருக்கு முன்னரும் பின்னரும் அவரது அரசியல் செயற்பாடுகள் பல்வேறு பரிணாமங்களை கொண்டுள்ளன. தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து போராடி சிறைவாசமும் அனுபவித்தவர். தனது அரசியல் வாழ்க்கையில், அநீதிக்கு எதிராகவும், நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் துணிந்து குரல் கொடுத்த மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை ஏறக்குறைய 10, வருடங்கள் தலைவராக செயற்பட்டு, ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு எதிராக கடுமையாக போராடினார்.
அரசியலின் மீதான அவரது ஆர்வம் அவரை தமிழ் அரசியலில் மிகவும் வெற்றிகரமான மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக திகழச்செய்தது. தமிழ் அரசியலில் மாத்திரமின்றி தேசிய அரசியலிலும் அசாத்தியமான திறமையும், துணிச்சலும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராகத் திகழ்ந்தார்.
பயங்கரவாத அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு அழிந்து கொண்டிருந்த ஒரு தேசத்தில், அச்சமற்ற மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவராக உருவெடுத்தார். எப்போதும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கவும் பொதுவான நிலையைக் கண்டறியவும் முயற்சித்தார். தமிழர் அரசியல் பரப்பில் மாவை ஒரு யதார்த்தவாதியாக திகழ்ந்தார். பொதுவான இலங்கை அடையாளத்தில் வேற்றுமையில் ஒற்றுமையை காணும் பயணத்தை நம்பினார்.
சுதந்திரம் கிடைத்து 77 ஆவது ஆண்டு நிறைவுறும் தருணத்தில், தனித்துவங்களை பாதுகாத்துக் கொண்டு பிரச்சினையாக இருந்து வரும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கை தேசத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் புதிய உபாயங்கள் மூலம் வெளிப்படையான பிரவேசத்துக்கான நடவடிக்கைகளை எடுப்பதே மாவை சேனாதிராஜ அவர்களுக்கு நாமளிக்கும் சிறந்த கௌரவமாகும்.
அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பாகவும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM