VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக சமரி அத்தபத்துவுடன் இணையும் John Keells Properties நிறுவனம்

30 Jan, 2025 | 11:55 AM
image

புறநகர்ப் பகுதியில் மிகச் சிறந்த வாழ்விடமாக அமையவுள்ள தனது VIMAN நிர்மாணத் திட்டத்தின் கீழ் John Keells Properties நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும், மாற்றத்திற்கு வித்திடும் இம்முயற்சி, இலங்கையில் அடிமட்டத்தில் மகளிர் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படுகின்றது.  இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், விளையாட்டில் அனைவருக்கும் முன்னுதாரணமாகவும் திகழும் சமரி அத்தப்பத்து இந்த உந்துசக்தி அளிக்கும் முயற்சியில் தனது தலைமைத்துவத்தையும், பேரார்வத்தையும் சேர்ப்பிக்கும் வகையில், VIMAN மற்றும் John Keells Properties ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளார்.

இந்த சுற்றுப்போட்டியானது 2025 பெப்ரவரி 2 அன்று ஜா-எலவில் இடம்பெறவுள்ளது. இலங்கையிலுள்ள 8 பாடசாலைகளைச் சேர்ந்த பாடசாலை கிரிக்கெட் வீராங்கனைகள், 16 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளின் கீழ் போட்டியிடவுள்ளனர். திறமைசாலிகளை இனங்கண்டு, அவர்களைவளர்ப்பதன் மீதான அர்ப்பணிப்பை இம்முயற்சி வெளிக்காண்பிக்கும் அதேசமயம், விளையாட்டுக்களில் பெண்களுக்கு உள்ள வாய்ப்புக்களையும், அது குறித்த விழிப்புணர்வையும் தோற்றுவிக்கின்றது.

கடந்த ஆண்டில் மகளிர் ஆசியக் கிண்ணத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருந்த இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து அவர்களின் தனித்துவமான துடுப்பாட்டப் பாணிகளை காண்பிக்கும் வகையில் அவற்றைக் கொண்டதாக இப்போட்டியின் உத்தியோகபூர்வ இலச்சினை இந்த அறிமுக நிகழ்வில் வெளியிடப்பட்டது.  இச்சுற்றுப்போட்டியின் குறிக்கோளான, உள்ளடக்கம், திறமைசாலிகள் மேம்பாடு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை இந்த இலச்சினை குறித்து நிற்கின்றது.

VIMAN Street Cricket Cup (VIMAN வீதி கிரிக்கெட் கிண்ணம்) தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0706 068 068 மூலமாக John Keells Propertiesஐத் தொடர்புகொள்ளவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் பயணச்...

2025-01-29 15:21:43
news-image

30 ஆண்டு நம்பிக்கையைக் கொண்டாடும் Maliban...

2025-01-29 10:01:31