சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக இலங்கை மருத்துவ சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிக்க மீயுயர் நீதிமன்றம் இன்று (1) முடிவுசெய்துள்ளது. இதன்படி, இம்மாதம் 22ஆம் திகதி மேற்படி மனுவை விசாரிக்கவும் தீர்மானித்துள்ளது.

அட்டர்னி ஜெனரல் பிரியசாத் டெப் மற்றும் மீயுயர் நீதிமன்ற நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்தன மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த மனு குறித்து விவாதிக்கப்பட்டபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.