அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் அடங்கிய விமானமொன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதி அனர்த்த நிவாரணப்பொருட்களே வந்தடைந்துள்ளதாகவும் குறித்த நிவாரணப்பொதியில் மீட்புப் பணிக்கு பயன்படுத்தக்கூடிய படகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.