(செ.சுபதர்ஷனி)
உயர்தரமான மருந்துகளை இந்நாட்டு அரச வைத்தியசாலைகள், நியாயமான விலையில் சந்தை விற்பனைக்காகவும் வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் அண்மையில் இடம்பெற்ற, தேசிய மருந்துகள் ஆலோசனைக் குழு மற்றும் மருந்துகள் தொடர்பான மேன்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கான உயர்தரமான மருந்துகளை தொடர்ச்சியாக விநியோகிப்பதுடன், நியாயமான விலையில் சந்தை விற்பனைக்கு தேவையான மருந்துகளை விநியோகிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது தேசிய மருந்துகள் ஆலோசனைக் குழு மற்றும் மருந்துகள் தொடர்பான மேன்முறையீட்டு குழுவின் முதன்மை பொறுப்பாகும். நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒரு குறிப்பிட்ட அளவு மருந்து வகைகள் தேசிய மருந்தக கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மீதமுள்ள மருந்து வகைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் மூலம் தனியார் மருந்தக நிறுவனங்கள் பெரும் இலாபம் ஈட்டியுள்ளன. நாட்டில் சில சந்தர்ப்பங்களில் மருந்து மாஃபியாக்களும் தமது கைவரிசையை காண்பித்துள்ளன. ஆகையால், தேசிய மருந்துகள் ஆலோசனைக் குழு மற்றும் மருந்துகள் தொடர்பான மேன்முறையீட்டு குழுவில் சுகாதாரத் துறை மற்றும் தமது தொழில் தொடர்பான உரிய புரிந்துணர்வைக் கொண்ட அதிகாரிகளை நியமிப்பது அவசியம்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இது சிறந்த வாய்ப்பாக அமையும். தற்போது புதிதாக நியமனம் பெற்ற குழுவினரும் இவ்விடயங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் உரியவாறு அமுல்படுத்த கடந்த காலங்களில் இருந்த அதிகாரிகள் எவரும் முயற்சிக்கவில்லை.
ஆகையால் தற்போது நியமனம் பெற்றுள்ள புதிய குழுவினர் நாட்டு மக்களுக்கு உயர் தரமான மருந்துகளை வழங்குவதை, பொறுப்பேற்று புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். உயர்தரமான மருந்துகளை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM