(நெவில் அன்தனி)
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (29) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாம் நாள் ஆட்டம் மழையினால் தடைப்பட்டு முடிவுக்கு வந்தபோது அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 330 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜா, பதில் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி குவித்த ஆட்டம் இழக்காத சதங்கள், ட்ரவிஸ் ஹெட் பெற்ற அரைச் சதம் என்பன அவுஸ்திரேலியாவை பலமான நிலையில் இட்டுள்ளன.
இப் போட்டியை 9999 டெஸ்ட் ஓட்டங்களுடன் எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித் முதலாவது ஓட்டத்தைப் பெற்றபோது 10000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்திசெய்து பலத்த பாராட்டைப் பெற்றார்.
ரிக்கி பொன்டிங் (13378 ஓட்டங்கள்), அலன் போர்டர் (11174), ஸ்டீவ் வோ (10927) ஆகியோரைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா சார்பாக 10000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த நான்காவது வீரரானார் ஸ்டீவன் ஸ்மித். தனது 115 டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர் மொத்தமாக 10103 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா, ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் முதல் விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் தடவையாக ஆரம்ப வீரராக களம் இறங்கிய ட்ரவிஸ் ஹெட் 57 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து மானுஸ் லபுஷேன் 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். உஸ்மான் கவாஜாவும் மானுஸ் லபுஸ்ஷேனும் 2ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அதன் பின்னர் உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 195 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை மிகவும் பலமான நிலையில் இட்டனர்.
உஸ்மான் கவாஜா 210 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 147 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 188 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 104 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
தனது 79ஆவது டெஸ்டில் விளையாடும் கவாஜா 16ஆவது சதத்தையும் 115ஆவது டெஸ்டில் விளையாடும் ஸ்மித் 35ஆவது சதத்தையும் பூர்த்திசெய்தனர்.
பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய, ஜெவ்றி வெண்டசே ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM