'பாதுகாப்பு படைகளின் பதவி நிலைப் பிரதானி' பதவி இனி இல்லை - பாதுகாப்பு செயலாளர்

Published By: Vishnu

29 Jan, 2025 | 05:59 PM
image

(எம்.மனோசித்ரா)

பாதுகாப்பு படைகளின் பதவி நிலைப் பிரதானி பதவிக்கு ஒரு நியமனத்தை வழங்க எதிர்பார்க்கவில்லை. அந்த பணி தொடர்பான பொறுப்புக்களை முன்னெடுப்பதற்கான இயலுமைய தமக்கிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் புதன்கிழமை (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாதுகாப்பு படைகளின் பதவி நிலைப் பிரதானி பதவியைத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. அந்த பணி தொடர்பான பொறுப்புக்களை பாதுகாப்பு அமைச்சின் மூலம் முன்னெடுப்பதற்கான இயலுமை காணப்படுகிறது. தேவை ஏற்படின் அந்த பதவிக்கான நியமனத்தை வழங்க முடியும். எவ்வாறிருப்பினும் தற்போது பாதுகாப்பு படைகளின் பதவி நிலைப் பிரதானியொருவரை நியமிப்பதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் 2022 மே 31 வரை ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தளதியாக பணியாற்றினார். அதன் பின்னர் தனது பதவி காலம் நிறைவடைய 2022 ஜூன் முதலாம் திகதி பாதுகாப்பு படைகளின் பதவிநிலை பிரதானியாக நியமிக்கப்பட்டார். கடந்த டிசம்பருடன் அவரது பதவி காலம் நிறைவடைந்து அவர் ஓய்வு பெற்றார். எனினும் அந்த பதவிக்கு அதன் பின்னர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரூ.24 பில்லியன் நட்டத்தில் இருந்து இலாப...

2026-09-09 12:25:53
news-image

20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின்...

2026-09-09 17:35:50
news-image

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்...

2026-09-09 12:45:30
news-image

மலையக மக்களின் வீடு, காணி உள்ளிட்ட...

2026-09-09 17:31:26
news-image

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி மக்கள்...

2026-09-09 13:44:30
news-image

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட...

2026-09-09 17:30:07
news-image

மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை...

2026-09-09 14:12:24
news-image

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல்...

2026-09-09 17:02:51
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24