இன்றைய சூழலில் எம்மில் பலரும் பல காரணங்களுக்காக அரசாங்கத்தின் அனுசரணையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். காணி விடயமாக இருந்தாலும் கல்வி தொடர்பான சான்றிதழாக இருந்தாலும் கடவுச்சீட்டு தொடர்பான விடயமாக இருந்தாலும் அரசாங்கம் மற்றும் அரசாங்க பணி தொடர்பான ஒப்பந்தங்களை பெறுவதிலும் அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் அவசியம்.
இதனால் பலரும் பல தருணங்களில் பல விவரிக்க இயலாத அசௌகரியங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி இருக்கக்கூடும். இந்நிலையில் அரசாங்கத்தின் அனுசரணை பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால் எம்முடைய ஜாதகத்தில் சூரிய பகவானின் வலிமை அதிகமாக இருக்க வேண்டும். சுபமாக இருக்க வேண்டும்.
ஆனால் பலருக்கும் இது சாத்தியமாவதில்லை. இந்நிலையில் சூரிய பகவானின் அருளை பரிபூரணமாய் பெறுவதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
சூரிய பகவானுக்கு உகந்த கிழமையான ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையில் குறிப்பாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி சூரியன் உதயமாகும் தருணத்தில் கிழக்கு திசை நோக்கி நின்று, ஒரு செப்பு குவளையில் தூய நீரை எடுத்துக்கொண்டு, அதில் சிறிதளவு குங்குமம் மற்றும் சிவப்பு வண்ணம் கொண்ட மலர்களை இடவேண்டும்.
இதனை சூரிய பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதனை ஓடும் நதி நீரிலோ அல்லது உங்களது வீட்டுக்கு அருகே இருக்கும் செடிகளிலோ சூரிய பகவானை தியானித்து சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
இந்தத் தருணத்தில் 'ஓம் நமோ ஆதித்யாய புத்ரி பலம் தேஹிமே சதா!' அல்லது உங்களுக்கு பிடித்த சூரியனின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இத்தகைய வழிபாட்டினை வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தால் அரசாங்கம் தொடர்பான பணிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகளும் , தாமதங்களும் விலகி நற்பலன் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM