எம்மில் சிலருக்கு எதிர்பாராத தருணத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவோ அல்லது காயத்தின் காரணமாகவோ அல்லது சத்திர சிகிச்சையின் காரணமாகவோ முறையான மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தழும்புகள் ஏற்படக்கூடும்.
இந்த தழும்புகளில் விவரிக்க இயலாத சில காரணங்களால் வலி ஏற்படும். இதனை மருத்துவ மொழியில் ஸ்கார் பெயின் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு பிரத்யேக சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
உடலில் சிறிய தழும்புகள் இருந்தாலும் குறிப்பாக சத்திர சிகிச்சைக்கு பிறகான நெஞ்சு பகுதியில் ஏற்பட்டிருக்கும் தழும்புகள், அடிவயிற்று பகுதியில் ஏற்பட்டிருக்கும் தழும்புகள் ஆகியவற்றில் வலி உண்டாகும். எம்மில் பலருக்கும் தழும்புகளினால் வலி உண்டாகுமா..! என வியப்புடன் கேட்பார்கள்.
ஆனால் தழும்புகளில் ஏற்படும் வீக்கம் காரணமாக வலி ஏற்படக்கூடும். முதலில் அரிப்பாகவும் பிறகு எரிச்சலாகவும் பிறகு வலியாகவும் உருவாகும்.
இதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் பிரத்யேக சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்கலாம். மேலும் தழும்புகளின் மீது பிரத்யேக மருந்தியல் தன்மையுடன் உள்ள பிளாஸ்திரியை பயன்படுத்தியும், நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலமாகவும், வலி நிவாரணி மூலமாகவும் இதற்கு நிவாரணம் வழங்குவார்கள்.
வைத்தியர் ஸ்ரீ தேவி - தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM