உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டமூலம் ; இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரியில் நடத்த தீர்மானம்

Published By: Digital Desk 3

30 Jan, 2025 | 10:05 AM
image

(நமது நிருபர்)

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) எனும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் 2025 பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி புதன் கிழமைக்கு முன்னர்  சபாநாயகருக்குக் கிடைக்கப் பெற்றால் குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை 2025.02.06 திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  அரிசி ஆலைகளை அரசாங்கம் நடாத்துதல், தொழிலாளர் நலன்புரி அலுவலர்களை நியமனஞ் செய்வதற்கு பொருத்தமான முறையியலொன்றைத் தயாரித்தல்,பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல்,  மற்றும்  கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதைத் தவிர்த்து தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் வாரம் 3 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. பெப்ரவரி 05ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக (4 கேள்விகள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 3.30 மணி வரை அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான ஒழங்குவிதிகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. பி.ப 3.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரம் ஆளும் தரப்பினால்  பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 06ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து,மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 வரை புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான இரு வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணிவரை  பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவால்  கொண்டுவரப்படும் தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்குச் சுவீகரித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனால்  கொண்டுவரப்படும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பொருட்களைக் கொள்வனவு செய்யும் செயல்முறைக்கு முறையான பெறுகை வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் தொடர்பான தனியார் உறுப்பினர் பிரேரணை,  பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவால்  கொண்டுவரப்படும், அரசாங்கம் வசம் அரிசி கையிருப்பினை பேணிச் செல்வதற்காக வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியால்  கொண்டுவரப்படும் தொழிலாளர் நலன்புரி அலுவலர்களை நியமனஞ் செய்வதற்கு பொருத்தமான முறையியலொன்றைத் தயாரித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்கவால்  கொண்டுவரப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹக்கீமால் கொண்டுவரப்படும், கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதைத் தவிர்த்து தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை என்பன மீதான  விவாதம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) எனும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் 2025 பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெறுமாயின் , குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை 2025.02.06ஆம் திகதிக்கு நியமிக்கப்பட்ட அலுவல்களுடன் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38