தரையைத் தகர்த்து வெடித்த குடிநீர்க் குழாய்!

Published By: Devika

01 Jun, 2017 | 11:00 AM
image

உக்ரேனின் தலைநகர் கீவ்வில், நிலக் கீழ் நீர்க்குழாய் திடீரென்று வெடித்ததால் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சில கார்கள் முற்றாகச் சேதமடைந்தன. தெய்வாதீனமாக உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை.

குடிநீர் வினியோகத்துக்காக நிலத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த குழாயில் ஹைட்ரோலிக் பரிசோதனை ஒன்றைச் செய்தபோது ஏற்பட்ட விரிசலே இந்த வெடிப்புக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. 

இந்த வெடிப்பின்போது, ஒரு நொடியில் சுமார் ஏழு மாடி உயரத்துக்குப் பாயும் அளவுக்கு நீர் வேகமாகத் தள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்த நீர்க் குழாய் வெடிக்கும் காட்சி தற்போது இணைய தளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்