சசிகுமார் வெளியிட்ட ' மதுரை பையனும் சென்னை பொண்ணும்' எனும் இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக்

29 Jan, 2025 | 04:38 PM
image

நடிகர் கண்ணா ரவி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மதுரை பையனும் சென்னை பொண்ணும் ' எனும் இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனை நட்சத்திர நடிகர் சசிகுமார் மற்றும் நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டு, இணையத் தொடர் குழுவினருக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் விக்னேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' மதுரை பையனும் சென்னை பொண்ணும் ' எனும் இணைய தொடரில் கண்ணா ரவி, ஏஞ்சலின், சியாராஷ்மி, மோகன் குரேஷி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

முருகேஷ் வீரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணைய தொடருக்கு சச்சின் ராஜ் செலோரி இசையமைத்திருக்கிறார். 

ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்திற்காக ஹாப்பி ஹேங்கோவர் பிலிம்ஸ்  மற்றும் தயாரிப்பாளர் சஞ்சய் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14- ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு பிரத்யேகமாக வெளியாகும் இந்த இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் நாயகன் கண்ணா ரவியும் , நாயகி ஏஞ்சலினும் துவிசக்கர வாகனத்துடன் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பின்னணியில் வீதிகளில் நடந்து வருவது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால். காதலர்களுக்கிடையே இது 'கிரிஞ்ச் ' காதலா..?  2 K கிட்ஸ் காதலா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனோவிஷன் நிறுவனத் தயாரிப்பிலான 'வித் லவ்'...

2026-07-21 19:04:07
news-image

ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்சிக்'...

2026-07-21 17:15:28
news-image

'பட்ஜட்டை விட நான்கு மடங்கு கூடுதலாக...

2026-07-21 17:06:58
news-image

ஓக்டோபரில் வெளியாகும் நயன்தாராவின் 'ஹாய்'

2026-07-21 17:18:12
news-image

புதுமுக நடிகர் டி ஐ கபில்...

2026-07-21 16:56:30
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் 'தகப்பன்' படத்தின்...

2026-07-21 16:54:45
news-image

நடிகர் சூரி நடிக்கும் 'ஏழு கடல்...

2026-07-21 17:05:06
news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11
news-image

இணைய தொடர்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை...

2026-07-20 14:21:06