ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார்.
ஜனாதிபதியின் வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில், போராட்டம் நடத்துவதை தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (29) மனுத்தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உட்பட ஐவரை நாளைய தினம் வியாழக்கிழமை (30) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM