எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் பயணச் சேவைகளை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் புதிய கிளையை திறந்துள்ளது

29 Jan, 2025 | 03:21 PM
image

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் தனது வெளிச்செல்லும் பயணச் சேவைகளை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் வட பகுதி மக்களுக்கு உலகத் தரமான பயணத் தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடனும் சமீபத்தில் புதிய கிளையொன்றை யாழ்ப்பாணத்தில் திறந்துவைத்தது. இலங்கையில் முன்னணிப் பயணத்துறை முகவராகவும் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் (IATA) மிகப் பழமை வாய்ந்த பிரதிநிதிகளில் ஒன்றாகவும் விளங்கும் எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தை உள்ளடக்கும் விதத்தில் விஸ்தரிப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

புதிய யாழ்ப்பாணம் கிளையின் திறப்பு விழாவில் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் விசேடமாக அழைக்கப்பட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டனர். 

அவ்வாறு அழைக்கப்பட்டிருந்தவர்களில் பிரபல தொழிற்றுறைத் தலைவர்கள், செல்வாக்குமிக்க சமூகப் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதிப்புக்குரிய பிரமுகர்கள் அடங்கியிருந்தனர்.

யாழ்ப்பாணம் கிளை இல.10ஏ,  பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் வசதியான ஓர் இடத்தில் அமைந்துள்ளதால் உலகத் தரமான பயணச் சேவைகளை நாடும் எவரும் இக்கிளைக்கு இலகுவாகச் சென்று சேவைகளைப் பெற முடியும். விமானப் பயணச் சீட்டுகள், வெளிநாட்டு ஹொட்டேல் ஒதுக்கீடுகள், உல்லாச சுற்றுலாக்கள், வீசா சேவைகள், தல யாத்திரைகள், விளையாட்டுத் துறை மற்றும் இசை நிகழ்ச்சி சார்ந்த சுற்றுப்பயணங்கள், MICE (கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) சேவைகள் உட்பட பயணத்துடன் தொடர்புடைய சகல சேவைகளையும் இக்கிளையில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 

உங்கள் பயணம் ஒரு வியாபாரப் பயணமாக இருந்தாலும் விடுமுறை கழிப்புப் பயணமாக இருந்தாலும் யாழ்ப்பாணம் பிரதேசத்திலுள்ள உங்களின் தேவைகளை ஈடுசெய்வதற்கு எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸில் உள்ள நிபுணத்துவமான அலுவலர்கள் ஆயத்தமாக இருக்கின்றனர்.

எயிற்கின் ஸ்பென்ஸ் பி.எல்.சி.யின் இணைத் தவிசாளர் மற்றும் இணை முகாமைத்துவப் பணிப்பாளரும் குழுமத்தின் சுற்றுலாத்துறை பிரதானியுமாகிய ];l~hdp ஜயவர்தன தகவல் தருகையில், “இந்தியாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களின் தேவைகளை ஈடுசெய்யவும் இலங்கை வழங்கும் இனிய அனுபவங்களை அவர்கள் பெறுவதற்கு வசதியாக ஓர் இணைப்புப் பாலமாக விளங்கவும் எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் விரும்புகிறது. சர்வதேச பயணங்களுக்கான அணுகல் வசதியை நாடு முழுவதிலும் விஸ்தரிக்கவும் எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸின் அதியுன்னத சேவைகள் மற்றும் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்ள சகல மக்களுக்கும் வழங்கவும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை புதிய கிளை பிரதிபலிக்கின்றது” என்று கூறினார்.

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் ஜயசுந்தர, புதிய விரிவாக்கம் பற்றி ஆர்வத்துடன் குறிப்பிடுகையில், “எமது செயற்பாடுகளை யாழ்ப்பாணத்துக்கு விரிவுபடுத்துவது குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இது பெரும் வாய்ப்புகளையும் உலகை ஆராய ஆர்வமுள்ள ஓர் உயிர்த்துடிப்பான மக்கள் சமூகத்தையும் கொண்ட ஒரு முக்கியமான பிரதேசமாகும். எமது அனுபவம் வாய்ந்த பயண ஆலோசகர்கள் இப்பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு நிபுணத்துவ ஆலோசனை, பிரத்தியேகமான பயண நிகழ்ச்சிநிரல் மற்றும் முழுமையான பயணத் தீர்வுகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளனர். விமானப் பயணங்களைப் பதிவு செய்தல் முதல் தங்குமிட வசதி, வீசா பெறுதல், பயணக் காப்புறுதி வரையான சகல சேவைகளையும் ஒரே இடத்தில் எவ்வித பிரச்சினையுமின்றி வழங்குவார்கள்” என்று குறிப்பிட்டார்.

தினசரி விமான சேவைகள் மூலம் இலங்கையை இந்தியாவுடன் இணைக்கும் ஒரு முக்கிய மையமாக யாழ்ப்பாணம் விளங்குகின்றது.

புதிதாகத் திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் கிளை அலுவலகத்தில் எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காணப்படுகின்றனர். (இடமிருந்து வலமாக: திருமதி மானெல்கா ஜயசுந்தர – சந்தைப்படுத்தல் கனிஷ்ட நிறைவேற்று அலுவலர், ஜனாப் மொகமட் இர்பான் - முகாமையாளர் - பயணச்சீட்டுகள், திரு. நஷான் செனவிரத்ன – பொது முகாமையாளர், திரு. நளின் ஜயசுந்தர – முகாமைத்துவப் பணிப்பாளர், திரு. சுரங்க ரத்நாயக்க – பிரதம செயற்பாட்டு அதிகாரி, திரு. மனோஜ் கனகரட்ணம் - யாழ்ப்பாணம் கிளை முகாமையாளர், திரு. கபில ஜயசிங்க - நிதி மற்றும் IT பொது முகாமையாளர், ஜனாபா ஸஹரின் ஹமீன் - சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர்)

இலங்கையிலுள்ள இந்திய துணைத் தூதுவர் கௌரவ சாய் முரளி, நாடாவை வெட்டி புதிய யாழ்ப்பாணம் கிளையைத் திறந்துவைக்கின்றார். எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. நளின் ஜயசுந்தர (இடம்), MMBL பணப் பரிமாற்ற முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சமிந்த ஹிந்துரங்கல (வலம்) ஆகியோர் அருகில் நிற்கின்றனர்.

யாழ்ப்பாணத்தின் முதலாவது வாடிக்கையாளரான தொழிலதிபர் திரு. கலிஸ்டஸ் ஜோசப், யாழ்ப்பாணம் கிளை அலுவலகம் திறக்கப்பட்டதும் எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. நளின் ஜயசுந்தரவிடமிருந்து தனது பயண ஆவணங்களைப் பெற்றுக்கொள்கின்றார்.

யாழ்ப்பாணம் கிளை அலுவலகத்தின் திறப்பு விழாவில் எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் முகாமைத்துவ அணியினர் காணப்படுகின்றனர். (இடமிருந்து வலமாக - ஜனாப் மொகமட் இர்பான் - முகாமையாளர் - பயணச்சீட்டுகள், யாழ்ப்பாணம் கிளை முகாமையாளர் திரு. மனோஜ் கனகரட்ணம், பொது முகாமையாளர் திரு. நிஷான் செனவிரத்ன, பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. சுரங்க ரத்நாயக்க, முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. நளின் ஜயசுந்தர, சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் ஜனாபா ஸஹரின் ஹமீன், பொது முகாமையாளர் நிதி மற்றும் IT திரு. கபில ஜயசிங்க)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right