அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் பிர­தே­சங்­க­ளையும் விரைவில் மீள் கட்­டி­யெ­ழுப்பும் பணி­களை அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ளது. இதற்­க­மை­வான சந்­திப்பு இன்று பிற்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அனைத்து அமைச்­சர்­களின் பங்­கு­பற்­ற­லுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெறவுள்­ளது என அமைச்­ச­ரவை இணை பேச்­சாளர் அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார். 

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்களை அறி­விக்கும் ஊடக சந்­திப்பில் நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக இங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சர் என்ற வகையில் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­கவும் அனர்த்தம் தொடர்பில் தீர்­மா­னங்கள் சில­வற்றை எடுத்­துள்ளார். இத­ன­டிப்­ப­டையில் வெள்ள அனர்த்தம் மற்றும் மண் சரிவில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் வழங்­கு­வ­தற்­காக நிதி அமைச்சும் மற்றும் மத்­திய வங்­கி­யுடன் இணைந்து முக்­கி­ய­மான பல விட­யங்­களை உட­ன­டி­யாக முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. 

அரச மற்றும் தனியார் வங்­கி­களில் கடன் பெற்­றுள்ள அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக 2017 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி முதல் மூன்று மாத­கால நிவா­ரண காலம் வழங்­கப்­பட உள்­ளது. இதற்­கான  சுற்­று­நி­ரு­பங்கள் அனைத்து வங்­கி­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. 

வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்­தத்­தினால் பொரு­ளா­தா­ரத்­திற்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்பு தொடர்பில் மாவட்ட ரீதி­யி­லான தர­வு­களை ஜுன் 2 ஆம் திக­திக்கு முன்னர் பெற்றுக் கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.  மாவட்ட ரீதியில் கிடைக்­கப்­பெறும் இந்த தக­வல்­களை தேசிய திட்­ட­மிடல் திணைக்­க­ளத்தின் ஊடாக மொத்த பாதிப்பை மதிப்­பீடு செய்து சமர்ப்­பிக்க பணிக்­கப்­பட்­டுள்­ளது. 

பாதிக்­கப்­பட்ட சொத்­துக்கள் மற்றும் உயி­ரி­ழப்­பு­க­ளுக்­கான நட்­ட­ஈடு மற்றும் காப்­பு­றுதி தொகையை மிக விரைவில் வழங்­கு­வ­தற்கு பிர­தமர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். இதற்­கான சுற்று நிரு­பமும் மத்­திய வங்­கி­யினால் சம்பந்­தப்­பட்ட காப்­பு­றுதி நிறு­வ­னத்­திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் அனர்த்­தத்தில் ஏற்­பட கூடிய பாதிப்­பு­களை கவ­னத்தில் கொண்டு கடந்த வருடம் நல்­லாட்சி அர­சாங்கம் முழு நாடும் உள்­ள­டங்கும் வகையில் விசேட காப்­பு­றுதி திட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ளது. இந்த திட்­டத்தின் கீழ் வழங்க வேண்­டிய உயிர் மற்றும் சொத்து இழப்­பு­க­ளுக்­கான நட்­ட­ஈட்­டினை வழங்­கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கு விசேட திட்டங்கள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.