முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு ஜப்பான் நோக்கிப் பயணமானாதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

10 நாள் விஜயமாக ஜப்பான் பயணிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது மகன் யோஷித்த ராஜபக்ஷவையும் இவ் விஜயத்தின் போது அழைத்துச்சென்றுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச்சொந்தமான விமானத்தில் நேற்றிரவு 7.15 மணியளவில் 9 பேரடங்கிய குழுவினருடன் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மஹிந்தராஜபக்ஷவின் ஜப்பான் விஜயத்துடன் தொடர்புடைய மற்றுமொரு குழுவினரும் வேறொரு விமானத்தில் பயணித்துள்ளதாகவும் குறித்த குழுவில் பியால் நிஷாந்தவும் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.