இலங்கை மற்றும் சீனாவிற்குமிடையில் குற்றவாளிகளை பறிமாறுவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதியால் சமர்பிக்கப்பட்டிருந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் சீனாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அந்நாட்டு ரூபவ் நீதிமன்றத்தின் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றவர்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த கைதி பரிமாற்றல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தகு விடயமாகும்.