மாத்தறையில் வருடாந்த வைத்தியர் இடமாற்றத்தை இடை நிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

Published By: Vishnu

29 Jan, 2025 | 05:28 AM
image

(செ.சுபதர்ஷனி)

வருடாந்த வைத்தியர் இடமாற்றத்தை இடை நிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை (28) மாத்தறை வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை, கம்புருகமு புதிய வைத்தியசாலை மற்றும் பிற சுகாதார நிறுவனங்களின் வைத்திய அதிகாரிகளும் ஒன்றிணைந்து மேற்படி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கம்புருகமுவ புதிய வைத்தியசாலை ஆகிய இரு வைத்தியசாலைகளுக்கிடையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இடம் பெற்று வந்த வைத்திய இடமாற்றம் அரச சேவை ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே மேற்படி போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் இவ்விடயம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் விடுக்கப்பட்டிருந்தது விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை, கம்புருகமுவ புதிய மாவட்ட வைத்தியசாலைக்கும் இடையில் உரிய பொறிமுறையை பின்பற்றாமல்  வைத்திய இடமாற்றங்கள் தொடர்பில் தன்னிச்சையான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக  2025 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான இடமாற்ற செயன்முறையும் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அனைத்து வைத்தியசாலைகளிலும் உரிய எண்ணிக்கைக்கு அமைய வைத்தியர்கள் கடமையாற்றுவது அவசியம். ஆகையால் வைத்தியர்களுக்கான இடமாற்றங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அனைத்து பிரிவுகளிலும் அங்கம் வகிக்கும் விசேட நிபுணர்கள், நிர்வாகப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் சகல தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான இடமாற்றமும் எவ்வித வேறுபாடுமின்றி வழங்கப்படுவது அவசியம். நிர்வாக தாபன விதிக்கோவையின் மூன்றாவது அத்தியாயத்துக்கு அமைய வைத்திய இடமாற்றங்கள் இடம்பெற வேண்டும்.

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான வருடாந்த இடமாற்றங்களுக்கான இறுதிப் பட்டியல் 2024.11.01 ஆம் திகதிக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். எனினும் சுகாதார அமைச்சு அதற்கான விண்ணப்ப படிவங்களைக் கூட இதுவரை வெளியிடவில்லை.

சுகாதார அமைச்சின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளால் மாத்தறை மாவட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய வைத்தியசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட தன்னிச்சையான முடிவின் விளைவாகவே மேற்படி நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் அதன் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், கம்புருகமுவ பிரதேசத்தில் புதிய மாவட்ட வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டது.

எனினும் தற்போது அவ்வைத்தியசாலையின் நிர்மானப் பணியும் அதற்கான நிதி உதவித் திட்டமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த மருத்துவமனையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எத்திட்டமும் ஒங்கமைக்கப்படவில்லை.

எனினும் இரு வைத்தியசாலைகளுக்கு இடையில் வைத்தியர்களுக்கான வருடாந்த இடமாற்றம் 2024 முதல் அரச சேவை ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 19 வைத்தியர்களின் இடமாற்றத்தையே அரச சேவை ஆணைக்குழு இவ்வாறு இடை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக குறித்த வைத்தியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறான தீர்மானங்களை உரிய அதிகாரிகள் ஆண்டின் தொடக்கத்திலாவது அறிவித்திருக்கலாம். எனினும் 2024 ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டதன் பின்னரே இத்தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

வைத்தியர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு மேலதிகமாக, வருடாந்த வைத்திய இடமாற்றங்களை இடைநிறுத்துவதால் ஏற்படக்கூடிய சிக்கலை தீர்க்கத் தவறியதும், 2025 ஆம் ஆண்டிற்கான தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களின் இடமாற்றப் பட்டியலை வெளியிடுவதில் கால தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இடமாற்றத்தை வழங்காது நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் வைத்தியர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அநீதியிளைத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17