(நெவில் அன்தனி)
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் முதலாவது சதத்தை ட்ரிஷா கொங்காடி குவித்து சாதனை படைக்க, ஸ்கொட்லாந்தை 150 ஓட்டங்களால் இந்தியா மிக இலகுவாக வெற்றிகொண்டது.
கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 208 ஓட்டங்களைக் குவித்தது.
இந்த வருட 19 வயதுக்குட்பட்ட ரி20 மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
ட்ரிஷா கொங்காடி, குணாலன் கமலினி ஆகிய இருவரும் 81 பந்துகளில் 147 ஓட்டங்களைப் பகிர்ந்த இந்தியாவுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
இந்த இணைப்பாட்டம் 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் சகல விக்கெட்களுக்குமான சாதனையுடன் கூடிய அதிகூடிய இணைப்பாடடமாகும்.
தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த குணாலன் கமலினி ஜீ 42 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து ட்ரிஷாவும் சானிக்கா சோல்கேயும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ட்ரிஷா கொங்காடி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 59 பந்துகளில் 13 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 110 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
சானிக்கா சோல்கே ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்க துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 14 ஒவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 58 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது.
பிப்பா கெலி (12), எம்மா வால்சிங்கம் (12), பிப்பா ஸ்ப்ரூல் (11), நய்மா ஷெய்க் (10 ஆ.இ.) ஆகிய நாலவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் மிதிலா விநோத் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வைஷ்ணவி ஷர்மா 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ரிஷா கொங்காடி 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: ட்ரிஷா கொங்காடி.
பங்களாதேஷுக்கு வெற்றி
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் தனது கடைசி முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்ட பங்களாதேஷ் 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி 13 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 8.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
தென் ஆபிரிக்காவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் குழு சுப்பர் சிக்ஸ் போட்டி மழையினால் முழுமையாகக் கைவிடப்பட்டது.
நாளைய தினம் கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டிகள்
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் கடைசி 2 சுப்பர் சிக்ஸ் போட்டிகள் நாளை புதன்கிழமை (29) நடைபெறவுள்ளது.
இலங்கை தனது கடைசி போட்டியில் அவுஸ்திரேலியாவை பாங்கி YSD - UKM கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் எதிர்தாடவுள்ளது. நைஜீரியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டியும் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு போட்டிகளுடன் சுப்பர் சிக்ஸ் சுற்று நிறைவடைகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM