இலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட Huawei GR3 பிரதான ஸ்மார்ட்போனை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Google இன் Android 7.0 உடன் வெளிவந்துள்ள Huawei GR3 2017, இப்புதிய அறிமுகத்தின் மூலமாக, GR3 2017 கொண்டுள்ள வலுவான சிறப்பம்சங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.

புதிய செயல்திறன் தர ஒப்பீடுகளை அறிமுகப்படுத்தல் மற்றும் புதுமைகளை வெளிக்கொண்டுவருதல் ஆகியன தொடர்பில் Huawei தொடர்ச்சியாகக் காண்பித்து வரும் அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டினை இப்புதிய GR3 2017 சாதனம் காண்பிக்கின்றது. கைகளில் மிகவும் கச்சிதமாக உள்ளடக்கும் வகையில் நவீன பாணியிலான மெல்லிய முன்புற மற்றும் பின்புற கண்ணாடி மேற்பாக உடலமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனம், பொன்னிறம், கறுப்பு, நீலம் ஆகிய வர்ணங்களில் கிடைக்கப்பெறுகின்றது. 

5.2 அங்குல FHD In-cell IPS முகத்திரையை இச்சாதனம் கொண்டுள்ளதுடன், 5 புள்ளிகளில் பல்தொடுகைக்கு (5 point multi-touch) உதவுகின்ற 2.5ன வளைந்த மேற்பரப்புடன் முழுமையான தொடுகைத் திரையையும் கொண்டுள்ளது. LCD முகத்திரையானது IPS FHD 1920*1080 மற்றும் 16M வர்ணங்களின் பிரிதிறனைக் கொண்டுள்ளது.

app lock உடன் பாதுகாப்பான உபயோகத்திற்கு வழிகோலும் வகையில் முகத்திரையை வேகமாக lock மற்றும் unlock செய்ய விரல் அடையாள இனங்காணல் (fingerprint ID) தொழில்நுட்பத்தை GR3 2017 கொண்டுள்ளதால் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் இதனை மிகவும் விரும்புவர். அத்துடன் வாடிக்கையாளர்கள் தங்களது Huawei ID இனையும் சரிபார்த்து, புகைப்படங்களை எடுக்கவோ, வீடியோக்களை பதிவு செய்யவோ, அழைப்புக்களுக்கு பதிலளிக்கவோ, நிறுத்த அலாரம் ஒன்றாக பயன்படுத்தவோ அல்லது புகைப்படங்களை பிரவுசிங் செய்யவோ முடியும். dual-mic மற்றும் இரைச்சலை ரத்துச் செய்யும் தொழில்நுட்பங்களுடன் (noice cancelling) உள்ளிணைப்புச் செய்யப்பட்ட FM ஒன்றையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

Kirin 655, 4*2.1GHz A53 மற்றும்  kw ;Wk ; 4*1.7GHz A53 processor, 3GB RAM 150Mbps/50Mbps வரையான அதிவேக LTE வலையமைப்பு போன்ற தொழில்நுட்பங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. GR3 2017 கொண்டுள்ள 12MP Auto Focus பின்புற கேமரா மற்றும் LED Flash+ 8MP ஆகியன குறைந்த வெளிச்சம் கொண்ட சூழ்நிலைகளில், அவ்வளவான தொனியின்றி 1.25um pixels பாரிய அளவுகளையும் முன்புற மற்றும் பின்புற கேமராக்களை உபயோகித்து திறன்மிக்க வழியில் வசப்படுத்த உதவுகின்றன.

முன்புற கேமராவானது 83 பரந்த கோணத்திலான வில்லையையும் F2.0 aperture இனையும் கொண்டுள்ளது. பின்புற கேமராவானது light painting, time-lapse, panorama, HDR, touch to capture மற்றும் audio control போன்ற பல்வேறு தொழில்நுட்பத் தெரிவுகளைக் கொண்டுள்ளது. இச்சாதனம் Wi-Fi 802.11 b/g/n தொழில்நுட்ப அம்சத்தையும் கொண்டுள்ளதுடன், hotspot தெரிவிற்கு இடமளிக்கின்றது. மேலும், accelerometer, proximity sensor, ambient light sensor மற்றும் magnetometer (திசைகாட்டி - compass) ஆகிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. 

இத்தொலைபேசியின் மின்கலம் lithium polymer ஆல் ஆனது. உள்நாட்டுச் சந்தையில் இப்புதிய சாதனத்தின் அறிமுகம் தொடர்பில் Huawei Device இன் இலங்கைக்கான உள்நாட்டு முகாமையாளரான ஹென்றி லியு, கருத்து வெளியிடுகையில்,

“இலங்கையிலுள்ள ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு புத்தம்புதிய GR3 2017 மிகவும் மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளோம். சந்தையில் எமது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தெரிவுகளை வழங்குவதுடன், பெறுமானம் மற்றும் புதுமை ஆகியவற்றின் மூலமாக இலங்கையிலுள்ள ஸ்மார்ட்போன் பாவனையாளர்களின் வாழ்க்கைமுறையை மேம்படுத்துவது மட்டுமின்றி, அதனை மாற்றியமைக்கும் சாதனங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் மீது Huawei மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

Huawei இன் தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் ஒன்றிணைந்து Huawei GR3 2017 அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ரூபா 31,900 என்ற விலையில் கிடைக்கும் இச்சாதனம், நாடளாவியரீதியில் தெரிவு செய்யப்பட்ட முகவர்கள், சிங்கர் ஸ்ரீலங்கா காட்சியறைகள் மற்றும் Huawei அனுபவ காட்சியறைகள் மூலமாகக் கிடைக்கப்பெறுகின்றது.

Brand Finance வெளியிட்டுள்ள அறிக்கையில் 2016 ஆம் ஆண்டில் உலகிலுள்ள 100 பெறுமதிமிக்க வர்த்தக நாமங்கள் பட்டியலில் 47 ஆவது ஸ்தானத்தில் Huawei தரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், Interbrand வெளியிட்டுள்ள மிகச் சிறந்த சர்வதேச வர்த்தக நாமங்கள் பட்டியலில் 72 ஆவது ஸ்தானத்தை Huawei தனதாக்கியுள்ளது. GfK அறிக்கைகளின் பிரகாரம் இலங்கையில் 2 ஆவது ஸ்தானத்திலுள்ள ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமாக Huawei திகழ்ந்து வருவதுடன், 30% சந்தைப்பங்கினையும் கொண்டுள்ளது.

2017 ஆம் ஆண்டின் முதற் காலாண்டுப் பகுதியில் 34.55 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளதாக Huawei நுகர்வோர் வர்த்தகப் பிரிவு அறிவித்துள்ளது. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.6% அதிகரிப்பாகும். IDC வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் பிரகாரம், பூகோள ஸ்மார்ட்போன் சந்தைப் பங்கில் Huawei இன் ஸ்தானம் 9.8% ஆக அதிகரித்துள்ளதாகவும், அதன் மூலமாக உலகில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் மூன்று ஸ்தானங்களில் இடம்பிடித்துள்ள நிறுவனம் என்ற தனது இருப்பினை மேலும் பலப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.