ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இதன்படி இராஜாங்க அமைச்சர்களாக லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பாலித ரங்கே பண்டார, வசந்த பராக்கிரம சேனாநாயக்க மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளதுடன், ஹர்ஷ டி சில்வா, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் கருணாரத்ன பர்னவித்தாரன ஆகியோர் பிரதி அமைச்சர்களா சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்கள்

1. லக்ஷமன் யாப்பா அபேவர்தன - அரச தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சர்

2. பாலித ரங்கே பண்டார - நீர்பாசன இராஜாங்க அமைச்சர்

3. வசந்த பராக்கிரம சேனாநாயக்க - வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

4. எரான் விக்ரமரத்ன  - நிதி இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

1. ஹர்ஷ டி சில்வா - தேசிய கொள்கை மற்றும் பொருளாதார துறை பிரதி அமைச்சர்

2. ரஞ்சன் ராமநாயக்க - சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

3. கருணாரத்ன பர்னவித்தாரன - திறன் அபிவிருத்தி பிரதி அமைச்சர்