யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடியில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்ற உத்தரவில் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆசிரியர் இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி , இளைஞனிடம் 68 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.
பணத்தினை பெற்ற ஆசிரியர் நீண்ட காலமாக இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காதமையால் , பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாார்.
முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணையின் பின் ஆசிரியரை கைது செய்து யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , இளைஞனிடம் பெற்ற முழு பணத்தினையும் , இளைஞனிடம் கையளிக்கிறேன் என மன்றில் கூறி பணத்தினை இளைஞனிடம் மீள கையளித்தார்.
அதனை அடுத்து , ஆசிரியரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று வழக்கினை ஒத்திவைத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM