ஹெரி போட்டரில் பலரையும் தமது நடிப்பு திறமையில் கலக்கிய பிரித்தானிய பிரபல நடிகரான எலன் ரிக்மன் நேற்று காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எலன் ரிக்மன் , ஹரிபொட்டர், டை ஹார்ட் , பிரின்ஸ் ஒப் தீப், ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

1970 ஆம் ஆண்டுகளில் தனது திரையுலக வாழ்வை ஆரம்பித்த ரிக்மேன் தமது 69 வயதில் காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹொலிவுட் திரையுலகில் வில்லனுக்கு புது அர்த்தம் கொடுத்த இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

எதிர்வரும் மே மாதம் இவர் இறுதியாக பணியாற்றிய படமொன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.