கடற்கரைகளை சுத்தப்படுத்தும் தேசிய முயற்சியில் இணையும் டேவிட் பீரிஸ் குழுமம்

28 Jan, 2025 | 11:01 AM
image

சமூக நலன்புரி மற்றும் சுற்றுச்சூழல் நிலைப்புத் தன்மைக்கான அர்ப்பணிப்பின் ஓர் அங்கமாக மாத்தறை கம்புறுகமுவ தலரம்ப கடற்கரையின் 850 மீற்றர் தூரத்தை சுத்தப்படுத்தும் செயற்றிட்டமொன்றை டேவிட் பீரிஸ் குழுமம் அண்மையில் முன்னெடுத்தது. 

ஹம்பாந்தோட்டை முதல் புத்தளம் வரையான கடற்கரைகளைச் சுத்தமாகவும், கவர்ச்சிகரமானதாகவும் பேணும் அரசாங்கத்தின் பரிய முயற்சித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

கடற்கரையைச் சுத்தப்படுத்தும் இந்த நிகழ்ச்சி, குழுமத்தின் மாத்தறை செயற்பாட்டு நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றதுடன், கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் மாத்தறை மாவட்ட செயலகம் ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிறுவனத்தின் பணியாளர்களுக்கு மேலதிகமாக ருகுனு பல்கலைக்கழகத்தின் 12 பட்டதாரி மாணவர்களும் இதில் பங்கெடுத்திருந்ததுடன், கழிவுகள் மற்றும் குப்பைகளைஅகற்றுவதில் அவர்கள் ஒன்றிணைந்திருந்தனர். 

தூய்மையான சூழலுக்குப் பங்களித்து, உள்நாட்டு மற்றும் சுற்றூப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான கடற்கரைகளை மேம்படுத்தும் நோக்கில் அவர்கள் இந்த முயற்சியில் கைகோர்த்திருந்தனர்.    

SSWசுற்றுச்சுழல் தொடர்பான டேவிர் பீரிஸ் குழுமத்தின் நோக்கத்தை அங்கீகரித்து, வாகன சேவைகள் நிலையங்கள் பிரிவில் ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது 2024ல் மெரிட் விருது வழங்கப்பட்டது. 

அத்துடுன், 2019ஆம் ஆண்டில் இடம்பெற்றTop 50 Professional & Career Women Awards – Ninth Edition (Sri Lanka & Maldives) விருது விழாவில் “தனியார் துறையில் பெண்களை வலுவூட்டுவதற்கான சிறந்த சமூகக் கூட்டுப்பொறுப்பு நிகழ்ச்சித்திட்டம்” என்ற விருதும் வழங்கப்பட்டது. 

குழுமத்தின் சுற்றுச் சூழல் மற்றும் சமூக நலன்புரித் திட்டமானது கடற்கரைகளைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அப்பால்பட்டதாகும். 

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குதல், வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குதல், கடுமையான நோய்கள் மற்றும் இயலாமை உடைய நபர்களுக்கான நிதி உதவிகளை வழங்குதல், கிராமப் புறங்களில் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தல் மற்றும் தொழில்முனைவு பயிற்சித் திட்டங்களின் ஊடாகப் பெண்களை வலுப்படுத்தல் என்பன குழுமத்தின் கூட்டுப்பொறுப்பு முயற்சிகளில் உள்ளடங்குகின்றன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மிஸ் கிராண்ட் ஸ்ரீலங்கா 2026' உடன்...

2026-09-16 15:32:09
news-image

TATA, Mercedes-Benz வாகனங்களுக்கு பிரத்தியேக நிதியுதவி...

2026-09-09 18:24:31
news-image

வெற்றிகரமாக நிறைவுற்ற ‘ProFood ProPack &...

2026-09-02 14:24:23
news-image

CCC Foundation நடத்தும் bikeathon நிகழ்ச்சியின்...

2026-08-27 12:24:37
news-image

2026 இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு...

2026-08-22 12:33:59
news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02