கண்டி தேசிய வைத்தியசாலையில் வைத்தியரை மதுபோதையில் தாக்கிய இரு சகோதரர்கள் கைது

Published By: Vishnu

28 Jan, 2025 | 04:05 AM
image

கண்டி தேசிய வைத்தியசாலையில் வைத்தியரை மதுபோதையில் தாக்கியதாக கூறப்படும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் வைத்தியசாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு 7.30 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் முச்சக்கர வண்டியில் தேசிய வைத்தியசாலையிலிருந்து பேராதனை பிரதான வீதிக்கு செல்லும் குறுகிய வீதி ஊடாக வந்துள்ளார்.

ஆஸ்பத்திரி வளாகத்தில் கடுமையான  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அந்த வீதியை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பதில்லை என ஆஸ்பத்திரி  நிர்வாகம் முடிவு செய்ததால், அவரை மருத்துவமனை வளாகத்திற்குள் செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இதன்போது வைத்தியரும் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தமையினால் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வார்த்தைப் பிரயோகம் காரணமாக அவரது பயணம் தடைபட்டுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதி தான் வைத்தியசாலை ஊழியர் எனவும், வைத்தியசாலை ஊழியர் என்றால் அடையாள அட்டையை காட்டி வைத்தியசாலை வளாகத்திற்குள் செல்லுமாறு வைத்தியர் கூறியுள்ளார். 

அப்போது அந்த நபர்  வைத்தியரை  சரமாரியாக தாக்கியுள்ளார்.

 சந்தேக நபரை வைத்தியசாலை பொலிசார் கைது செய்யவுள்ள நிலையில், அவரது சகோதரர் ஒருவரும் அவ்விடத்திற்கு வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரையும் பொலிஸார்  கைது செய்தனர்.

சம்பவத்தின் போது கண்டி, ஹந்தான கெமுனு மாவத்தையில் வசிக்கும் இருவரும் குடிபோதையில் இருந்ததாக மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் பணிப்புரையின் பேரில் குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்...

2025-03-25 13:46:14
news-image

சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும்...

2025-03-25 13:14:31
news-image

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை...

2025-03-25 13:00:07
news-image

இரு வெவ்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் திருட்டு...

2025-03-25 12:53:38
news-image

தேர்தல் செயற்பாடுகள், முறைப்பாடுகள் தொடர்பாக வடக்கு...

2025-03-25 12:39:54
news-image

இலங்கையின் படையதிகாரிகளை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை...

2025-03-25 12:40:16
news-image

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச்...

2025-03-25 12:36:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-25 12:05:28
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் 2...

2025-03-25 12:15:46
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டிலிருந்து...

2025-03-25 11:29:23
news-image

துவிச்சக்கரவண்டி மோதி காயமடைந்து சிகிச்சை பெற்று...

2025-03-25 12:02:38
news-image

யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி...

2025-03-25 11:23:33