bestweb

பாகிஸ்தான் மண்ணில் 34 வருடங்களின் பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு டெஸ்ட் வெற்றி

27 Jan, 2025 | 06:58 PM
image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக முல்தான் கிரிக்கெட் விளையாட்டரங்கில் மூன்று நாட்களுக்குள் இன்று (27) நிறைவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 120 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றது.

பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது கடந்த 34 வருடங்களில் இதுவே முதல் தடவையாகும்.

இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் 127 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது. அந்தப் போட்டியும் 3 நாட்களுக்குள் நிறைவடைந்திருந்தது.

இதற்கு அமைய முல்தானில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட இந்தத் டெஸ்ட் தொடர் 1 - 1 என சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்துக்கு மத்தியில் துடுப்பாட்ட வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற 244 ஓட்டங்களே தொடரில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக அமைந்தது.

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானின் 38 வயதுடைய இடதுகை சுழல்பந்துவீச்சாளர் நோமன் அலி, முதல் இன்னிங்ஸில் ஹெட்-ட்ரிக் உட்பட 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் 4 விக்கெட்களைக் கைப்பற்றிய நோமன் அலி, அப் போட்டியில் 10 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

ஆனால், மேற்கிந்தியத் திவுகளின் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஜோமெல் வொரிக்கன் 2 இன்னிங்ஸ்களிலும் 9 விக்கெட்களை வீழ்த்தி நோமன் அலியின் அற்புதமான பந்துவீச்சை பலனற்றுப்போகச் செய்தார்.

அப்போட்டியில் 254 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை 2ஆம் நாள் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் ஆரம்பித்த பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கை அடைவதற்கு கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் மீதமிருந்தது.

ஆனால், 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான், இன்று காலை தொடர்ந்து துடுப்பெடுத்தாடி எஞ்சிய 6 விக்கெட்களை 57 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்து தோல்வியைத் தழுவியது.

கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப் போட்டி இன்று காலை பகல்போசன இடைவேளைக்கு முன்னர் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியுடன் முடிவடைந்துவிட்டது.

மேற்கிந்தியத் தீவுகளின் முதல் இன்னிங்ஸில் கடைநிலை வீரர்களான குடாகேஷ் மோட்டி, ஜோமெல் வெரிக்கன், கெமர் ரோச் ஆகிய மூவரே அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்றனர்.

பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் வழமைபோல் மொஹம்மத் ரிஸ்வான், சவூத் ஷக்கில் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 163 (குடாகேஷ் மோட்டி 55, ஜோமெல் வொரிக்கன் 36ஆ.இ., கெமர் ரோச் 25, கவெம் ஹொஜ் 21, நோமன் அலி 41 - 6 விக்., சஜித் கான் 64 - 2 விக்.)

பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 154 (மொஹம்மத் ரிஸ்வான் 49, சவுத் ஷக்கீல் 32, சஜித் கான் 16 ஆ.இ., ஜோமெல் வொரிக்கன் 43 - 4 விக்., குடாகேஷ் மோட்டி 49 - 3 விக்., கெமர் ரோச் 15 - 2 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 244 (க்ரெய்க் ப்ரத்வெய்ட் 52, டெவின் இமியாச் 35, அமிர் ஜங்கூ 30, கெவின் சின்க்ளயார் 28, சஜித் கான் 76 - 4 விக்., நோமன் அலி 80 - 4 விக்.)

பாகிஸ்தான் - வெற்றி இலக்கு 254 ஓட்டங்கள் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 133 (பாபர் அஸாம் 31, மொஹமத் ரிஸ்வான் 25, ஜொமெல் வொரிக்கன் 27 - 5 விக். கெவின் சின்க்ளயார் 61 - 3 விக்., குடாகேஷ் மோட்டி 35 - 2 விக்.)

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: ஜொமேல் வொரிக்கன்

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில்...

2025-07-16 23:05:12
news-image

தீர்மானம் மிக்க ரி20 கிரிக்கெட் போட்டியில்...

2025-07-16 20:56:13
news-image

பங்களாதேஷுடனான தீர்மானம் மிக்க போட்டியில் முதலில்...

2025-07-16 19:21:08
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-07-16 18:53:36
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர்...

2025-07-16 17:07:14
news-image

பாடசாலைகளுக்கு இடையிலான வட மாகாண கராத்தே...

2025-07-16 15:51:03
news-image

ரி20  தொடரை வெல்வதற்கு இலங்கை அணியினர்...

2025-07-15 20:22:41
news-image

டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு...

2025-07-15 17:34:16
news-image

இந்தியாவை 22 ஓட்டங்களால் வீழ்த்தி டெஸ்ட்...

2025-07-14 22:36:02
news-image

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர்...

2025-07-14 12:46:54
news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55