bestweb

சசிகுமார் நடிக்கும் ' மை லார்ட்' படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியீடு

27 Jan, 2025 | 02:57 PM
image

'அயோத்தி', 'கருடன்', 'நந்தன்' என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை அளித்த முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனை நடிகர்  ஆர்யா  மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி இயக்குநர்களான அனுராக் காஷ்யப் - ராஜ் பி. ஷெட்டி - கிரீஷ்  - லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- ஆகியோர்  இணைந்து வெளியிட்டுள்ளனர்.

முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ' மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் பழிக்கு பழிவாங்கும் வழக்கமான கொமர்ஷல் கதையாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்க, அம்பேத்குமார் வழங்குகிறார் .

இப்படத்தின்  படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் ' மை லார்ட் ' படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் கதையின் நாயகனான சசிகுமாரும், நாயகியான சைத்ராவும் ஆள் அரவமற்ற காணியில் துவி சக்கர வாகனத்தின் பின்னணியில் இருவரும் புகை பிடிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் 'சீதா பயணம்...

2025-07-11 17:40:45
news-image

ஓஹோ எந்தன் பேபி - திரைப்பட...

2025-07-11 16:40:08
news-image

மாயக்கூத்து - திரைப்பட விமர்சனம்

2025-07-11 16:11:54
news-image

செப்டம்பரில் வெளியாகும் விஜய் அண்டனியின் '...

2025-07-11 16:12:18
news-image

இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் - அன்னா...

2025-07-11 16:12:32
news-image

சமூக வலைதளங்களின் இருண்ட பக்கத்தை விவரிக்கும்...

2025-07-10 16:58:52
news-image

கார்த்தி நடிக்கும் 'மார்ஷல்' படத்தின் டைட்டில்...

2025-07-10 16:58:36
news-image

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க...

2025-07-10 16:53:40
news-image

''நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டில்...

2025-07-09 18:34:55
news-image

சிவகார்த்திகேயனின் 'மதராசி'யுடன் மோதும் வெற்றி மாறனின்...

2025-07-09 18:19:56
news-image

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும்...

2025-07-09 18:19:30
news-image

கிறித்தவ மத கன்னியாஸ்திரிகளின் வாழ்வியலை விவரிக்கும்...

2025-07-09 18:21:37