பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அமெ­ரிக்­கா­விற்கு மருத்­துவ சிகிச்­சை­க­ளுக்­கா­கவே சென்­றுள்ளார். இருப்­பினும் ஒவ்­வொரு 6 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு ஒரு முறையும் அவர் நாட்டில் நிலவும் அனர்த்த நிலை­மைகள் குறித்த அறி­வு­றுத்­தல்­களை பெற்­றுக்­கொண்­ட­ வண்­ணமே உள்­ளா­ரென அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில்  நாட்டில் பாரிய அனர்த்த நிலைமை நில­வு­கின்றபோது பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் துறைசார் அமைச்­சரும் நாட்டில் இல்­லா­ம­லி­ருப்­பது சரி­யா­னதா என ஊட­க­வி­ய­லாளர்கள் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கின்றபோதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 அவர் மேலும் தெரி­விக்­கையில்,

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அனர்த்தம் நில­வு­கின்ற சூழ்­நி­லையில் மருத்­துவ சிகிச்­சைகள் என்ற பேரில் அமெ­ரிக்­கா­விற்கு சென்­றி­ருப்­பது பொருத்­த­மா­ன­தா என்ற கேள்­விகள் பல தரப்­பு­க­ளி­டமி­ரு­ந்தும் வரு­கின்­றன.

பிர­தமர் சிகிச்­சை­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்று 18 மாதங்­க­ளுக்கு முன்­பா­கவே அறி­வுறுத்­தப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் அலு­வ­ல்கள் கார­ண­மாக அவர் 18 மாதங்­க­ளாக சிகிச்சை எடுத்­துக்­கொள்­ளா மல் காலம் தாழ்த்­தினார்.

மேலும் சிகிச்­சை­களை காலம் தாழ்த்து­வது அவ­ருக்கு சிறந்­த­தல்ல என்ற நிலை­மையை கருத்திற்கொண்­டுதான் தற்போது சிகிச்­சை­களின் பிர­காரம் அமெரிக்கா சென்­ றுள்ளார். 

எவ்­வா­றா­யினும் அவர் அமெ­ரிக்கா செல்லும் முன்­பாக அனர்த்த நிலைமை தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட வேண்டிய அனைத்து செயற்­பா­டுகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்திவிட்டே சென்றார். குறிப்பாக 2 பில்லியன் ரூபா சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித் தும் அவரே அறிவுறுத்தினார் என்றார்.