அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்தானும் எகிப்தும் மேலும் அதிகளவில் காசா மக்களை உள்வாங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்துகாசாவில் இனச்சுத்திகரிப்பு குறித்து அச்சம் வெளியாகியுள்ளது.
காசாவை சுத்தம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ள டொனால்;ட் டிரம்ப் காசாவிலிருந்து மேலும் அதிகளவு மக்களை எகிப்தும் ஜோர்தானும் உள்வாங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜோர்தான் மன்னர் அப்துல்லாவுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் எகிப்தின் ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
எகிப்து மேலும் அதிகளவில் காசாவிலிருந்து மக்களை உள்வாங்கவேண்டும்,நாங்கள் மில்லியன் கணக்கான மக்களை பற்றி பேசுகின்றோம்,நாங்கள் அந்த இடம் முழுவதையும் சுத்தம் செய்துவிட்டு எல்லாம் முடிந்துவிட்டது என தெரிவிக்கவிரும்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அகதிகளை வெற்றிகரமாக உள்வாங்கியமைக்காக ஜோர்தான் மன்னரை பாராட்டியதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மேலும் அதிகளவானவர்களை ஜோர்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என நான் விரும்புகின்றேன்,என தெரிவித்துள்ள டிரம்ப் காசா பள்ளத்தாக்கு முழுவதையும் நான் பார்க்கின்றேன் அது பெரும்குழப்பத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
காசாவில் வசிப்பவர்களை தற்காலிகமாக அல்லது நீண்டகாலத்திற்கு அங்கிருந்து வெளியேற்ற முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
காசா தற்போது முற்றாக இடிக்கப்பட்ட ஒருபகுதியாக காணப்படுகின்றது,கிட்டத்தட்ட அனைத்தும் இடிக்கப்பட்டு மக்கள் அங்கே இறந்துகொண்டிருக்கின்றனர்,அராபிய நாடுகளுடன் இணைந்து வெவ்வேறு பகுதிகளில் அவர்களிற்கு வீடுகளை அமைப்பதற்கு நான் முயற்சிப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்தை பாலஸ்தீன ஜிகாத் அமைப்பு கண்டித்துள்ளது.இது யுத்த குற்றவாளிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
டிரம்பின் கூற்று கண்டித்தக்கது என தெரிவித்துள்ள பாலஸ்தீனிய ஜிகாத் அமைப்பு டிரம்பின் கருத்துக்கள் யுத்த குற்றவாளிகளை ஊக்குவிக்கும் கட்டமைப்பிற்குள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்குள் பொருந்தக்கூடியவை, எங்கள் மக்களை தங்கள் நிலத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவது குறித்து டிரம்ப் கருத்து தெரிவி;க்கின்றார் என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதியின் இந்த கூற்றை கருத்தில்கொள்வது அவசியம் கடந்த ஒன்றரை வருட யுத்தத்தின்போது இவ்வாறான கருத்து ஏற்கனவே வெளியாகியுள்ளது என தெரிவித்துள்ள கத்தாரில் உள்ள ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக பேராசிரியர் அப்துல்லா அல் அரியன்,யுத்தத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேலிய அதிகாரிகளும் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளனர்,பாலஸ்தீனிய நிலப்பரப்பை முடிந்தளவு இனச்சுத்திகரிப்பு செய்வது குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM