தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், உலகின் அதிவேக கார் பந்தய வீரருமான அஜித் குமாருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் எனும் விருது வழங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'அமராவதி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அஜித் குமார். அதன் பிறகு அறுபதிற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து இன்று முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார். திரைத்துறையில் பணியாற்றிக் கொண்டே அவருடைய சுய விருப்பமான கார்பந்தயத்திலும் பங்கு பற்றி வந்தார்.
அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கார்பந்தயத்தில் இவருடைய தலைமையிலான அணி மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்தது. இந்நிலையில் இந்திய அரசு இவருக்கு பத்மபூஷன் எனும் உயரிய விருதினை வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் திரையுலகில் மட்டும் அல்லாமல் அரசியல்- விளையாட்டு- கலை- என பல்வேறு துறைகளில் இருந்தும் ஏராளமானவர்கள் அஜித் குமாருக்கு நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய அரசு கடந்த ஆண்டு பத்மபூஷன் விருதினை மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த்திற்கு வழங்கியது. அவரைத் தொடர்ந்து தற்போது இந்த ஆண்டு பத்மபூஷன் விருதிற்கு அஜித் குமார் தெரிவாகி இருக்கிறார்.
இந்நிலையில் பத்மபூஷன் விருதினை கலை மற்றும் நாட்டிய பிரிவில் சிறந்த சேவையாற்றியதற்காக பரதநாட்டிய கலைஞரும், நடிகையுமான திருமதி ஷோபனா சந்திரகுமாருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஷோபனாவும் 'தளபதி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றதால் அவருக்கும் திரையுலகினரும் ,கலையுலகினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM