தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடிக்கும் 'எம்புரான் 'படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகரும், இயக்குநருமான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'எம்புரான் 'எனும் திரைப்படத்தில் மோகன்லால் ,பிரித்விராஜ் சுகுமாறன், இந்திரஜித் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், அர்ஜுன் தாஸ், சானியா ஐயப்பன், சாய்குமார், சச்சின் கடேக்கர், சுராஜ்வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியீட்டு விழா கொச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த கிளர்வோட்டத்தில் பிரித்விராஜ் சுகுமாளன் - மோகன்லால் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற 'லூசிபர் 'படத்தின் தொடர்ச்சியாக பல கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருப்பதாலும், புதிய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்த கிளர்வோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM