செல்வத்தை அதிகரிப்பதற்கான பிரத்தியேக விருட்ச வழிபாடு

27 Jan, 2025 | 01:09 PM
image

ந்த பிறவியில் மனிதராக பிறந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் செல்வம் என்பது அவசியம். 99 சதவீத மக்கள் பொருளாதாரத்துக்காகவே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். அதாவது வாழ்நாள் முழுவதும் பொன், பொருள், மண் ஆகிய மூன்றை தேடி அடைவது தான் தங்களுடைய இந்த பிறவிக்கான பற்றுக்கோடு என வாழ்கிறார்கள். இவர்களில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே வெற்றி அடைகிறார்கள். மீதமுள்ள அனைவரும் கர்ம வினையின் காரணமாக செல்வத்தை எப்போதும் தேடிக்கொண்டிருப்பதிலேயே காலத்தை கடத்துகிறார்கள்.

கடினமாக உழைத்தாலும்  புத்திசாலித்தனமாக உழைத்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் செல்வ வளம் கிடைப்பதில்லை. இதற்காக எம்முடைய ஆன்மிக முன்னோர்கள் சில சூட்சுமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். அதில் விருட்ச வழிபாடும் ஒன்று. குறிப்பிட்ட ஆற்றல் கொண்ட விருட்சத்தை எம்முடைய வீட்டில் வளர்ப்பதால் செல்வ வளம் பெருகும்.

செல்வ வளம் தடையின்றி வரவேண்டும் என விரும்பினால், ஜெட் செடி என குறிப்பிடப்படும் சிறிய அளவில் வளரும் தாவரத்தை அதாவது விருட்சத்தை அதற்கான பிரத்யேக சந்தையிலிருந்து வாங்கி வந்து வீட்டில் வளர்க்க வேண்டும். இதனை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை சுக்கிர ஹோரை தருணத்தில் இந்த செடியின் மீது உங்களுடைய உள்ளங்கையை வைத்து மனதார பிரார்த்திக்க வேண்டும். 

'இன்று இந்தத் தொகை எனக்கு ஊதியமாகவோ சம்பளமாகவோ அன்பளிப்பாகவோ கிடைக்க வேண்டும். இதற்கு நான் உழைப்பதற்கு தயாராக இருக்கிறேன் அல்லது இன்றைய வணிகத்தில் எனக்கு குறிப்பிட்ட இந்தத் தொகை இலாபமாக கிடைக்க வேண்டும்” என பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். உங்களுடைய கோரிக்கையை உட்கிரகிக்கும் அந்த ஜெட் செடி - அதனுடைய ஆரா எனும் ஆற்றல் மூலமாக இந்த பிரபஞ்சத்துக்கு எடுத்துரைத்து, உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும். 

தொடர்ச்சியாக ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஒரே கோரிக்கையை நீங்கள் ஜெட் செடி மீது கை வைத்து பிரார்த்தனை செய்து வந்தால் ஏழாவது வாரத்தில் உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றுவதை அனுபவத்தில் வியப்புடன் காணலாம்.‌

உடனே எம்மில் சிலர் இத்தகைய தாவரத்தை ஒன்லைனில் ஓர்டர் செய்து வாங்கி பிரார்த்தித்தேன். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆறு வாரங்கள் கடந்துவிட்டன. ஒரு பலனும் இல்லை என புலம்புவார்கள். இவர்களுக்கு அவர்களுடைய வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கும். வாஸ்து குறைபாட்டை களைய வேண்டும் என்றால், 'சிறிய அளவில் மூங்கில் செடிகளை வாங்கி உங்களது வீட்டில் வைத்து விடுங்கள். இதற்கு நாளாந்தம் சிறிய அளவிற்கு தண்ணீரை ஊற்றி உன்னுடைய விரைவான வளர்ச்சியை போல் என்னுடைய செல்வ வளமும் விரைவாக உயர வேண்டும் என செவ்வாய்க்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிரார்த்தனையை மேற்கொள்ளுங்கள். ஐந்து வார பிரார்த்தனைக்கு பிறகு உங்களுடைய செல்வ வளம் குறித்த ஜெட் செடி பிரார்த்தனையை தொடங்கினால் செல்வ வளம் உயர்வது உறுதி என்பது உங்களுடைய அனுபவத்தில் நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15
news-image

சூரிய பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-01-29 20:43:33
news-image

செல்வத்தை அதிகரிப்பதற்கான பிரத்தியேக விருட்ச வழிபாடு

2025-01-27 13:09:12
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தமிழ் வழி எண்...

2025-01-25 16:24:32
news-image

தீபம் ஏற்றுவதில் கவனம் தேவையா..?

2025-01-24 16:44:40
news-image

வெற்றியை உண்டாக்கும் மந்திர வழிபாடு

2025-01-23 16:12:37