பிரென்ச்  ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான  ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரப்படுத்தலில் 50வது இடத்தில் உள்ள சுலோவாக்கிய வீரர் மார்ட்டின் க்லிஷன், தரப்படுத்தலில் 285வது இடத்தில் உள்ள பிரன்ச் வீரர் லவுரன்ட் லொக்கோலியுடன் மோதினர்.

3 மணித்தியாலம் 39 நிமிடங்களாக மிகவும் விறுவிறுப்பாகச் சென்ற இந்த போட்டியில்  க்லிஷன் 5-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

முதல் இரண்டு சுற்றுகளை 7-6 மற்றும் 6-4 என கைப்பற்றிய க்லிஷன், அடுத்த இரண்டு சுற்றுகளை 4-6 மற்றும் 0-6 என தோல்வியடைந்தார்.

எனினும் இறுதிச் சுற்றில் சிறப்பாக செயற்பட்ட க்லிஷன் 6-4 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு உலகின் முதற்தர வீரரான அண்டி முரேவுடன் மோதும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் போட்டி நிறைவடைந்தவுடன் எதிர்த்தாடிய லவுரன்ட் லொக்கோலியுடன் கை குலுக்குவதற்கு  க்லிஷன் கை நீட்டியபோது லவுரன்ட் லொக்கோலி அநாகரிகமான முறையில் நடந்துக்கொண்டதுடன், கை குலுக்குவதற்கும் மறுத்தார்.

இதனை பார்த்த ரசிகர்களும் சற்று அதிர்ச்சியடைந்தனர்.

எனினும் நிதானமாக இருந்த க்லிஷன் நடுவர்களிடம் கை குலுக்கிவிட்டுச் சென்றார்.

விளையாட்டு வீரரான லவுரன்ட் லொக்கோலியின் இந்த செயற்பாட்டினை விமர்சகர்கள் கண்டித்து வருவதுடன், இது ஒரு அநாகரிகமான செயல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.